Free dvds and BooksDownload 7.16 Mb.
Page1/264
Date conversion14.06.2018
Size7.16 Mb.
  1   2   3   4   5   6   7   8   9   ...   264
www.ProphecyFilm.com


Free DVDs and Books


  1. ஸ்வீடனைச் சேர்ந்த புனித பிரிஜித்தம்மாளின் (பிரிஜித்தா) தீர்க்கதரிசனங்களும், திருவெளிப்பாடுகளும்

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாம் மனுவுருவானதைப் பற்றி, தனது அன்புள்ள மணமகளான பிரிஜித்தாவிற்கு வெளிப்படுத்தின வெளிப்பாடுகளும், நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கையும், நமது விசுவாசத்தையும் நாம் நிந்திப்பதைக் கண்டித்தும் கூறியவை. மேலும், தமது அன்பான மணமகள் பிரிஜித்தா தம்மை அன்பு செய்யுமாறு அழைக்கின்றார்.


புத்தகம் 1 - அதிகாரம் 1
நானே வானத்தையும், பூமியையும் படைத்தவர். கடவுளோடும் தூய ஆவியோடும் ஒன்றித்திருக்கும் கடவுள் நானே. நானே இறைவாக்கினரோடும், தலைமைக் குருக்களோடும் பேசியவர். எனக்காகவே அவர்கள் எதிர்பாத்த்துக் காத்திருந்தனர். அவர்களது எதிர்பாத்தலின் நிமித்தமாகவும், நான் கொடுத்த வாக்குறுதியின் பொருட்டும், பாவக்கறையின்றி மனித உருவெடுக்க, ஒரு கண்ணாடியில் சூரிய ஒளி ஊடுருவதைப்போல நான் கன்னியின் வயிற்றிலே மனுவுருவானேன். சூரிய ஒளி ஊடுருவதால் கண்ணாடி சேதமடைவதில்லை, அதேபோல நான் மனு உருவெடுத்ததால் என் தாயின் கன்னிமை அழிந்துபோகவில்லை. இறைத்தன்மையோடு நான் மனித உருவெடுத்தேன்.
மனித உருவெடுத்து கன்னியிடம் கருவானதால், அனைத்தையும் படைத்து ஆட்சிசெலுத்தும் பிதாவோடும், தூய ஆவியோடும் ஒன்றித்திருப்பதினின்று எந்தக் குறைவும் எனக்கில்லை. எரியும் நெருப்பிலிருந்து ஒளியைப் பிரித்தெடுக்க முடியாது, அதேபோல நான் மனித உருவெடுக்கும் போதும், எனது இறப்பின் போதும், எனது இறைத்தன்மை என்னிடமிருந்து பிரிந்துவிடவில்லை.

மேலும், பாவமறியா தூய்மையான என் உடல் மனிதருடைய பாவங்களுக்காகவே, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை காயங்களோடு பாடுபட்டு, சிலுவையில் தொங்க வேண்டுமென்று நான் ஆயத்தமாக இருந்தேன். மக்கள் அனைவரும், நான் செய்யும் நன்மைகளை தங்கள் மனதில் கொண்டு என்னை அதிகமாக அன்பு செய்ய வேண்டுமென்ற கருத்திற்காகவே ஒவ்வொரு திருப்பலியும் அர்ப்பணமாக்கப்படுகிறது. இருந்தபோதிலும், மக்கள் இப்போது என்னை முழுவதுமாக மறந்துவிட்டனர், என்னை ஒதுக்கிவிட்டனர், தனது அரசாட்சியிலிருந்து விரட்டப்பட்ட அரசனைப்போல என்னைத் துரத்திவிட்டனர். அதற்குப்பதிலாக சூனியக்காரத் திருடனான சாத்தானுக்கு புகழாரம் சூட்டுகின்றனர்.

நானே மனிதனைப் படைத்து, அவனை மீட்டதால்,. எனது அரசாட்சியோடு மனிதர்களுடனே இருக்க விரும்புகின்றேன். மேலும், நானே அவர்களுக்கு அரசரும், ஆண்டவரும் ஆகும். ஆனால், திருமுழுக்கின்போது எனக்களித்த வாக்குறுதிகளை இன்று அவர்கள் மீறி, விசுவாசமற்றுப் போய்விட்டனர். நான் அவர்களுக்காகக் கொடுத்த சட்டங்களைப் புறக்கணித்துவிட்டனர். தங்களது சொந்த விருப்பத்தை மட்டுமே அன்பு செய்கின்றனர். நான் சொல்வதைக் கேட்க முற்றிலுமாக மறுக்கின்றனர். ஆனால், சாத்தானையும் அவனது செயல்பாடுகளையும் ஆதரித்து, எனக்கும் மேலாக அவனை நம்புகின்றனர். உண்மையாகவே சாத்தான் ஒரு திருடன் தான். ஏனென்றால், எனது இரத்தத்தைச் சிந்தி நான் மீட்டுக்கொண்ட ஆன்மாக்களை, தனது தீய சிந்தனையாளும், பொய் வாக்குறுதிகளாலும் தன்வசம் ஈர்த்துக்கொள்கிறான். அவன் மிகுந்த பலமுடையவன் அல்ல. ஆனால், கடவுள் மனிதனுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்திருப்பாதால், மனிதன் தனது விருப்பப்படி பகைவனது தீய எண்ணங்களுக்கு செவி சாய்க்கிறான். எனவே, அவனுக்கு ஏற்படும் துன்பங்களையும் அவன் ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளான்.
சாத்தான் கடவுளால் படைக்கப்பட்டபோது நல்லவனாகவே இருந்தான், ஆனால் தனது தீய எண்ணத்தால் அவன் பாதாளத்திற்குத் தள்ளப்பட்டான். எனவே, பாவிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையை நிறைவேற்றும் எனது ஊழியக்காரனாக இருக்கின்றான். மனிதர்களால் நான் நிந்திக்கப்படுகிறபோதிலும், அவர்கள் என்னைக் கூவி அழைத்து, தங்களது பாவங்களுக்காக தங்களைத் தாழ்த்திக்கொள்ளும்போது, அவர்களது பாவங்களை மன்னித்து, அவர்களை தீய கள்வனான சாத்தானிடமிருந்து முழுவதுமாக விடுவிக்கும் இரக்கம் கொண்டுள்ளேன். ஆனால், கடைசிவரை என்னை நிந்திப்பதைக் கைவிடாமல் இருப்பவர்களை நான் நீதிமானாகச் சந்திக்கும்போது, அவர்கள் நடுநடுங்கி, “ஐயோ, நாங்கள் கருவுற்றோம், பிறந்தோம், ஆனால் வல்லமைமிகுந்த ஆண்டவருக்கு பெருங்கோபம் உண்டாக்கும் செயல்களைச் செய்துவிட்டோம்” என்று கதறி அழுவார்கள்.

ஆனால், என் மகளே, எனக்காக என்னால் தேர்ந்துகொள்ளப்பட்டவளே, ஆத்மாவின் மூலம் என்னோடு பேச தேர்ந்துகொள்ளப்பட்டவளே, உன் முழு உள்ளத்தோடு என்னை அன்பு செய், உன் மகளையோ அல்லது மகனையோ அன்பு செய்வதைப்போல அன்று, இந்த உலகிலுள்ள அனைத்தையும்விட அதிகமாக என்னை அன்பு செய். நான் உன்னைப் படைத்தேன், என் அவயங்களில் ஒன்று கூட உனக்காக வேதனைபட்டதில்லை. நான் உன்னை அதிகமாக அன்பு செய்கின்றேன். உன்னை இழப்பதைவிட, தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை சிலுவையில் ஆணிகளால் அறையப்படவும் தயாராக உள்ளேன். நான் வானதூதர்கள் போற்றும் மேன்மைமகு அரசனாக இருந்தும், சிலுவையினடியில் நிர்வாணமாக நின்று, நிந்தை அவமானங்களுக்கு ஆளாகி, பொல்லாத வார்த்தைகளை எனது காதால் கேட்குமளவிற்கும் என்னைத் தாழ்த்திக்கொண்டேன், எனது தாழ்ச்சியை கடைபிடி.

என் சித்தமே உனது சித்தமாக இருக்கவேண்டுமென்று பிரையாசைப்படு. ஏனென்றால், என் தாய், அன்னை மரியாள், முதலிலிருந்து கடைசிவரை அவருக்காக எதையுமே விரும்பியதில்லை, எனது சித்தமே அவர்களது விருப்பமாக இருந்தது. நீயும் அவ்வாறு செய்தால், உன் இதயம் எனது இதயத்தோடு ஐக்கியமாகும். காய்ந்த சருகு எளிதாக தீப்பிடித்துக் கொள்வதைப்போல, எனது அன்பால் உன் இதயம் பற்றி எரியும். உன் ஆன்மா எனது அன்பால் நிறையும், அதுபோல என் ஆன்மாவும் உனது அன்பால் நிறையும். எல்லாவிதமான தற்போதைய உலகளாவிய தேவைகளும் உனக்குக் கசப்பாக இருக்கும், அதுபோல, சிற்றின்ப ஆசைகள் விஷத்தைப் போலாகும்.
எந்தவித சிற்றின்ப ஆசையுமின்றி, மகிழ்ச்சியும், ஆன்மீக இன்பமும் நிறைந்த என் தெய்வீக கரங்களில் நீ தஞ்சம் புகுந்துகொள்வாய். அப்போது உன் ஆன்மாவிற்குள் ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படையாக உணரமுடியும். வேறு எந்தவிதமான மகிழ்ச்சியும் இதற்கு ஈடாகாது. எனவே, உன் மனம் இந்த மகிழ்ச்சியைத் தவிர வேறு எதற்கும் ஆசைப்படாது.
என்னை மட்டும் அன்பு செய். நீ விரும்புகின்ற அனைத்தையும் நீ நிறைவாகப் பெற்றுக்கொள்வாய். ஏனென்றால், ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை விதவையின் கிண்ணத்தில் எண்ணெய் வற்றாமல் இருக்கும் என்று இறைவாக்கினர் சொல்லக் கேட்டதில்லையா? நானே உண்மையான இறைவாக்கினர். எனது வார்த்தைகளை நம்பி அவற்றை நிறைவேற்றுபவருக்கு, எண்ணெயும், மகிழ்ச்சியும், அக்களிப்பும் ஆரவாரமும் எல்லையில்லாக் காலத்திற்கும் குறைவுபடாது.

தம் மீது கொண்டுள்ள உண்மையான விசுவாசத்தின் காரணமாக இயேசு கிறிஸ்து தமது மணமகளான பிரிஜித்தா எவ்விதமான அலங்காரங்களையும், அடையாளங்களையும், கருத்துக்களையும் கொண்டிருக்கவேண்டும் என்று கூறியவை.


புத்தகம் 1 - அதிகாரம் 2

நானே விண்ணையும், மண்ணையும், கடலையும் மற்றும் இவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர். நானே பிதாவோடும், தூய ஆவியோடும் ஒன்றித்திருப்பவர். கற்களாலோ அல்லது தங்கத்தினாலோ செய்யப்பட்ட கடவுளல்ல. பல கடவுள்கள் இருக்கிறார்கள் என அன்று வாழ்ந்த மக்கள் நினைத்ததைப்போலவோ, சொன்னதைப் போலவோ இல்லாமல், ஒரே கடவுளாக, பிதா, சுதன், தூய ஆவி என்ற மூன்று பேராக வாழ்பவரான நானே அனைத்தையும் படைத்தேன். நான் வேறுஎவராலும் படைக்கப்பட்டவரல்ல. துவக்கமும் முடிவும் நானே! நானே இன்றும் என்றும் மாறாதிருக்கும் மேன்மை பொருந்திய கடவுள்.

நானே கன்னியின் வயிற்றிலிருந்து, தெய்வீகத்தன்மை அழியாமல் மனித சாயலில் பிறந்தவர். எனவே, நான் உண்மையுள்ள கடவுளின் மகனாகவும், கன்னியின் மகனாகவும் இருக்கின்றேன். நானே சிலுவையில் தொங்கி, மரித்து அடக்கப்பட்டவர். ஆயினும் எனது தெய்வீகம் என்னோடே இருந்தது. மனித சுவாபத்தில் நான் மரித்தபோது, கடவுளின் ஒரே மகனான எனது ஆன்மா எடுத்துக்கொள்ளப்பட்டதால், பிதாவோடும், தூய ஆவியோடும் தெய்வீகத்தன்மையோடு வாழ்ந்தேன்.
நானே சாவினின்று உயிர்த்தெழுந்து, விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டேன். இப்போது என் ஆன்மாவின் வழியாக உன்னோடு பேசிக்கொண்டிருப்பவர். என் இரகசியங்களை உனக்குக் காண்பிப்பதற்காகவும், அவை எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருப்பதாலும் நான் உன்னை எனது மணமகளாகத் தெரிந்து கொண்டேன்.
உன் மீது எனக்கு உரிமையுண்டு, ஏனென்றால், உனது கணவரின் இறப்பிற்குப் பிறகு, உனது அனைத்து விருப்பங்களையும் எனக்கு ஒப்புக்கொடுத்துவிட்டாய். அவரது இறப்பிற்குப் பிறகு, உன்னை எப்படித் தாழ்த்திக் கொள்வது, எனக்காக அனைத்தையும் முழுமையாக விட்டுவிடுவது என்ற கருத்துக்களே உனது எண்ணமாகவும், செபங்களாகவும் இருந்ததால் உன் மீது எனக்கு உரிமையுண்டு. உனது பேரன்பிற்காக என் இதயத்தில் நான் உனக்கொரு இடம் கொடுக்கவேண்டும். எனவே, உன்னை என் மணமகளாகத் தேர்ந்துகொண்டு, எனது விருப்பப்படி கடவுளுக்குரிய ஆன்மீக உறவை உனக்கு அளித்தேன்.
எனவே மணமகனின் திருமணத்திற்காக, தூய்மையாகவும்டூ நல்ல தயாரிப்போடும் இருப்பது மணமகளின் கடமையாகும். நீ செய்த பாவங்களை நினைத்துக்கொண்டிருந்தால் நீ எப்போதும் தூய்மையாக இருப்பாய். நான் உனது திருமுழுக்கின்போது உன்னை ஆதாமின் பாவக்கரையிலிருந்து தூய்மையாக்கியதுபோல, நீ ஒவ்வொரு முறையும் பாவத்தில் விழும்போது உன்னைக் காத்து உனக்கு ஆதரவளிக்கின்றேன். மணமகள் மணமகனின் அடையாளத்தை தனது மார்பில் எப்போதும் அணிந்திருக்கவேண்டும். அதாவது, நான் உனக்குச் செய்த நன்மைகளையும், சகாயங்களையும், நான் உன்னைப் படைத்ததையும்,. உனக்கு உடல், உயிர், உடல நலம் மற்றும் உலக இன்பங்களைக் கொடுத்தததையும், எனது மரணத்தின் மூலம் உன்னை உன் பாவங்களிலிருந்து மீட்டுக்கொண்டதையும் நினைவில் கொள்ளவேண்டும். மேலும், விண்ணுலகில் உனக்குரிய உரிமைப்பேற்றை நீ விரும்பினால் மட்டுமே அடைய முடியும் என்பதையும் எப்போதும் மனதில் கொள்வாயாக.

மணமகள் எப்போதும் மணமகனின் விருப்பத்தையே நிறைவேற்றவேண்டும். எனது விருப்பம் என்ன தெரியுமா? நீ மற்ற அனைத்தையும் விட என்னை அன்பு செய்யவேண்டும், நீ விரும்புவது நானாக மட்டுமே இருக்கவேண்டும். மனிதனுக்காகவே நான் அனைத்தையும் படைத்து, அவனுடைய கட்டுப்பாட்டிற்குள அவை அனைத்தையும் வைத்தேன். இருந்தபோதிலும், அவன் என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டு மற்ற அனைத்தையும் அன்பு செய்கிறான். அவனது மூதாதையர் இழந்த அனைத்தையும் அவனுக்கு நான் மீட்டுக்கொடுத்தேன். ஆனால், அவன் என்றும் நிலைத்திருக்கும் முடிவில்லா பேரின்பத்தை நாடாமல், மலைபோல் உயர்ந்து மண்ணோடு மண்ணாய்க் கலக்கும் கடல் அலைபோன்ற நிலையற்ற இன்பங்களையே நாடிச் செல்கிறான்.

என் மணமகளே, நீ என்னை மட்டும் விரும்பி, உன் குழந்தைகள், உறவினர், சொத்து, புகழ் மற்றும் அனைத்தையும் எனக்காக விட்டுக்கொடுத்ததால், நான் விலை மதிப்பற்ற உன்னதமான கொடையை உனக்குக் கொடுப்பேன். உனது சேவைகளுக்குச் சன்மானமாக தங்கமோ, வெள்ளியோ அல்ல, மாறாக மகிமையின் அரசராகிய நான் என்னையே உனக்குத் தருவேன். நீ எனக்காக உன்னைத் தாழ்த்திக்கொள்வதை அவமானமாக நினைத்தால், உனக்கு முன்பாக உன் கடவுளாகிய நான்பட்ட அவமானங்களை நினைவில் கொள். ஏனென்றால், நான் மண்ணில் வாழும் நண்பர்ளை அல்ல, மாறாக விண்ணகத்தில் என்னோடு வாழத்தகுதியான நண்பர்களையே தேடி வந்தேன். அதனால் தான் என்னுடைய நண்பர்களும் என்னைப் பின்தொடர்ந்தவர்களுமே என்னைக் கைவிட்டனர். நீ நோயாலும், உனக்குக் கொடுக்கப்பட்ட மற்ற வேலைகளாலும் அவதிப்படுவதைப் பற்றி கவலையும் அச்சமும் கொண்டிராதே. ஏனென்றால், நரகத்தில் நெருப்பில் வேகுவது இதைவிடக் கொடூரமானது என்பதை நினைவில்கொள்.
இவ்வுலகில் வாழும் மனிதர்கள் கடவுளாகிய என்னை மறுதலித்ததுபோல் வேறு ஒரு பெரிய மனிதனை மறுதலித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப்பார்?! எனது முழு உள்ளத்தோடு நான் உன்னை அன்பு செய்வதால், நீதிக்குப் புறம்பாக உனக்கு நான் ஒன்றும் செய்யவில்லை. உனது உடல் உறுப்புகள் பாவம் செய்ததால, அதற்காகப் பாவப் பரிகாரம் தேடவேண்டும். நீ செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவத்தை விட்டுவிட ஒருசில பாவப்பரிகார முயற்சிகளை எடுக்கும்போது, நான் உன்மீது கெண்டுள்ள இரக்கத்தின; பொருட்டு உனது பாவங்களை மன்னித்து, பெரிய தண்டனைகளிலிருந்து உன்னை மீட்டுக்கொள்கின்றேன்.
எனவே, நீ செய்யும் சிறிய முயற்சிகளுக்காக உன்னை நினைத்து பெருமை கொள். இவ்வாறாக, நீ கூடிய விரைவில் பாவத்திலிருந்து விடுபட்டு தூய்மைப்படுத்தப்பட்டு, அதற்கான பேறுகளையும் பெற்றுக்கொள்வாய். இவ்வாறு மணமகள் மணமகனின் விருப்பத்திற்கேற்ப செயலாற்றுவது, அவள் தன்னை மணமகனில் சரணடைவதற்கு ஏதுவாக அமைகிறது.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தமது மணமகளான பிரிஜித்தா தம்மை எவ்வாறு அன்பு செய்து, தம்மைப் போற்றவேண்டும் என்றும், கடவுளுக்கு எதிராக செயலாற்றும் தீயோனை வெறுக்க வேண்டுமென்றும், உலகின மீது கொள்ளவேண்டிய அன்பைக் குறித்தும் கூறியவை.


புத்தகம் 1 - அதிகாரம் 3

நீ ஆராதிக்கும் உனது கடவுளும், ஆண்டவரும் நானே. நானே எனது வல்லமையால் விண்ணையும் மண்ணையும் காத்துவருகிறேன். கடவுளும், மனிதனுமான நானே, கோதுமை அப்பத்தின் வடிவில் தினந்தோறும் திருப்பலியின்போது ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். நானாகவே உன்னைத் தேர்ந்துகொண்டேன். எனது பிதாவை பெருமைப்படுத்து! என்னை அன்பு செய்! தூய ஆவியானவருக்கு கீழ்படி! என் தாய்க்கு மற்ற பெண்களைவிட மேலான வணக்கம் செலுத்து! எனது புனிதர்களுக்கும் வணக்கம் செலுத்து! எனது உதவியால் உண்மையையும், பொய்மையையும் நன்கு தெரிந்துகொண்ட உனது ஆன்மீக குரு உனக்குச் சொல்லிக்கொடுத்த உண்மையான விசுவாசத்தைக் கடைபிடி! உண்மையான தாழ்ச்சியைப் பற்றக்கொள்! கடவுள் உனக்குக் கொடுத்துள்ள அனைத்து நன்மைகளுக்காகவும் அவரைப் புகழ்வதைவிட சிறந்த தாழ்ச்சி வேறென்ன உண்டு.

இன்றைய உலகில், பெரும்பாலோர், என்னை வெறுக்கின்றனர். எனது சித்தங்களையும், வார்த்தைகளையும், பயனற்றவைகளாவும், தங்களுக்கு அவை வேதனை தருபயவயாகவும் நினைக்கின்றனர். அவர்களைக் கெடுக்கும் சாத்தானை இருகரம்விரித்து வரவேற்கின்றனர். அவனை அன்பு செய்கின்றனர். எனக்குச் செய்ய வேண்டியவற்றை சகித்துக்கொண்டும், முனுமுனுத்துக்கொண்டும் செய்கின்றனர். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக மட்டுமே எனது பெயரை அவர்கள் அவ்வப்போது உச்சரிக்கின்றனர். அந்த அளவிற்கு அவர்கள் இவ்வுலக இன்பங்களை விரும்பிகிறார்கள், அதற்காக இரவும் பகலும் சோர்வின்றி உழைக்கத் தயாராக இருக்கின்றனர். இவர்கள் செய்வது எப்படி இருக்கிறதென்றால், தனது பகைவனுக்குப் பணம் கொடுத்து தனது மகனையே கொன்றுபோடும்படி சொல்வதைப்போல உள்ளது.
அவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். எனக்கு சிறிய காணிக்கைகளைச் செய்கிறார்கள், தங்களது உதட்டினால் எனக்கு புகழாரம் சூட்டுகிறார்கள். இவை அனைத்தையும் உலக வெற்றியைச் சேகரித்துக் கொள்வதற்காகவும் தங்களது அந;தஸ்தைக் காத்துக்கொள்வதற்காகவும், தாங்கள;் செய்யும் பாவத்தில் மீண்டும் ஈடுபடுவதற்காகவும் செய்கிறார்கள் இதனால் நல்வழியில் வளர வேண்டும;் என்ற நற்குணம் சிறிது சிறிதாக அவர்கள் இதயத்திலிருந்து குறைந்துபோகிறது.
நீ உனக்காக வேறு எதையும் விரும்பாமல், என்னை உன் முழு இதயத்தோடு அன்பு செய்தால், காந்தமானது இரும்புத் துகல்களை தன்வசம் ஈர்த்துக்கொள்வதைப்போல, நானும் உன்னை எனது நேசக்கரத்தால் அணைத்துக்கொள்வேன். உன்னை எனது கரங்களின்மேல் வைத்துக்கொள்வேன். அது எவ்வளவு பலம் வாய்ந்ததென்றால;், எவராலும் அதை நிமிர்த்த இயலாது, எவ்வளவு சக்திவாய்ந்ததென்றால் எவராலும் நிமிர்ந்த அக்கரங்களை மீண்டும் வளைக்க இயலாது, எவ்வளவு சுவையானதென்றால், எல்லாவிதமான நறுமணங்களையும், சுவையையும் கொண்டது. அது உலக இன்பங்களோடு ஒப்பிட முடியாதது. எல்லாவிற்கும் அப்பாற்ப்பட்டது.

விரிவுரை

இயேசு பிரிஜித்தாவின் ஆன்ம குரு என்றழைக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த மாஸ்டர் மத்தியாஸ் என்பவர் மிகவும் நல்லவர், இறையியல் வல்லுநர், பரிசுத்த வேதாகமத்திற்கு அழகான வர்ணணையை எழுதியவர். கத்தோலிக்க மறை உண்மைகளுக்கு எதிராக செயல்படும்படி சாத்தானால் அதிகம் துன்புறுத்தப்பட்டார். ஆனால், இயேசுவின் கருணைமிகுந்த பாதுகாப்பினால் அவை அனைத்திலுமிருந்து விடுபட்டு, சாத்தானை வென்றார். இது புனித பிரிஜித்தாவின் சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசு பிரிஜித்தாவிற்கு வழங்கிய வெளிப்பாடுகள்” என்ற இந்தப் புத்தகத்திற்கு முன்னுரைகள் இவரால் எழுதப்பட்டவையே. இவர் தனது சொல்லிலும் செயலிலும் மிகவும் பரிசுத்தமானவர்.

இவர் இறந்தபோது, இயேசுவின் மணமகளான பிரிஜித்தா உரோமை நகரில் வசித்துவந்தார். பிரிஜித்தா செபம் செய்துகொண்டிருந்தபோது, “மாஸ்டர் மத்தியாசே, நீர் பேறுபெற்றவர். விண்ணகத்தில் உமக்காக கிரீடம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. முடிவில்லா ஞானத்திற்கு இப்போது வாரும்” என்ற குரல் கேட்டது.

தனக்கு வெளிப்படுத்தப்பட்டயாவும் தீயோனிடமிருந்து வருகிறதா அல்லது வேறு எங்கிருந்து வருகிறது என்ற கவலை கொள்ளவேண்டாமென்று நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிரிஜித்தாவிற்குக் கூறியவை. மேலும் நன்மை தீமைகளை எவ்வாறு சரிவரப் புரிந்துகொள்வது என்றும் விளக்குகிறார்.


புத்தகம் 1 - அதிகாரம் 4
நானே உன்னைப் படைத்தவர், உனக்கு மீட்பு அளித்தவர். ஏன் எனது வார்த்தைகளின் மேல் அச்சம் கொண்டாய்? இவ்வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன? நல்ல ஆவியிடமிருந்தா அல்லது தீய ஆவியிடமிருந்தா, என்று எண்ணி கலங்குவது ஏன்? நான் கூறும் வார்த்தைகள் உனது மனச்சாட்சி ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இருந்தனவா? பதில் சொல்! காரணமில்லாமல் உன்னை நான் எதையும் செய்யுமாறு கட்டளையிட்டேனா?
இதற்கு மணமகளின் பதில் – “இல்லை ஆண்டவரே, அவை அனைத்தும் உண்மையானவை, நான் தான் தவறாகப் புரிந்துகொண்டேன்”. அதற்கு மணமகனாகிய இயேசு – “மூன்று செயல்களைச் செய்யுமாறு நான் உனக்கு கட்டளையிட்டேன். அதிலிருந்து இந்த வார்த்தைகள் நல்வரிடமிருந்து வருவன என்றும், நற்குணம் பொருந்தியவை என்றும் உணர்ந்து கொள். உன்னைப் படைத்து, உனக்கு வேண்டியவை அனைத்தையும் கொடுத்த கடவுளை நீ போற்ற வேண்டும் என்று கட்டளையிட்டேன். மற்ற அனைத்தையும்விட என்னை அதிகமாக போற்றவேண்டும் என்று உனது மனச்சாட்சியும் சொல்கறதல்லவா?
இரண்டாவதாக, என்னையன்றி எதுவும் படைக்கப்படவில்லை, மேலும் என்னையன்றி எதையும் உருவாக்கிட இயலாது என்ற சத்தியத்தின்மீது உண்மையான விசுவாசம் கொள்ளுமாறு கட்டளையிட்டேன். மேலும், உலகக் காரியங்களின் மீதுள்ள ஆசை அளவேடு இருக்கவேண்டும் என்று பணித்தேன். ஏனென்றால், உலகம் மனிதனுக்காகவும், அவனது உபயோகத்திற்காகவும் படைக்கப்பட்டது. அதேபோல, மேற்கூறியவற்றிற்கு எதிர்மறையான மூன்று காரியங்களின் மூலமாக அவை தீய ஆவியிடமிருந்து வருவன என்று புரிந்துகொள்.

சாத்தான் உன்னை தற்பெருமை கொண்டவனாகவும், உனக்கு கொடுக்கபட;்டுள்ள அனைத்திற்காகவும் அகந்தையோடு நீ வாழவும், உனது விசுவாசத்தை மறுதலிக்குமாறும் தூண்டுகிறான். உனது சிந்தனையும் உடலும் தீமையால் நிறைந்து, உன் உள்ளம் தீயனவற்றிற்காக ஏங்கி, பற்றி எரியவேண்டும் என தூண்டுகிறான். சில நேரங்களில், நல்லவனைப்போல நடித்து உன்னை ஏமாற்றுகிறான், ஆகவே, உனது மனச்சாட்சியைக்கொண்டு எதையும் ஆராய வேண்டும் என்று கட்டளையிட்டேன். மேலும், நடப்பவற்றை உனது ஆன்மீக குருவிடம் மறைக்காமல் கூறி அவரது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினேன்.

எனவே, கடவுளுடைய தூய்மையான ஆவியே உன்னோடு இருக்கின்றது என்பதில் சந்தேசம் கொள்ளாதே. இவை அனைத்தும் கடவுள் உன் மீது கொண்டுள்ள அன்பினாலும் நீ மற்ற அனைத்தையிம்விட கடவுளை விரும்புசறதாலுமே நடக்கின்றன. நான் மட்டுமே இப்படிச் செய்ய இயலும். சாத்தான் உன்னருகில் வர இயலாது. மேலும், மனிதர்களது பாவங்களின் பொருட்டு, எனக்கு மட்டுமே உரித்தான சில இரகசியங்களுக்காக நானே அவனை அனுமதித்தாலன்றி, அவன் உன்னைத் தீயோரின் அருகில் கொண்டுசெல்ல இயலாது. ஏனென்றால், உன்னைப் படைத்ததைப்போலவே அவனையும் படைத்தேன். படைப்பின்போது அவனை நல்லவனாகவே படைத்தேன். ஆனால், அவனது சுய சூழ்ச்சியால் தீயோனாக மாறினான். அவன் மீதும் அதிகாரம் செலுத்தும் ஆண்டவர் நானே.
எனவே, எனக்காக மிகுந்த பக்தியோடு பணிபுரியும் மக்களை பேய் பிடித்தவர்கள் என்று கூறி அவர்கள்மேல் வீண்பழி சுமத்துகிறான். கற்பும், நம்பிக்கையும் கொண்ட தனது மனைவியை விபச்சாரிக்குத் தாரைவார்க்கும் ஒரு மோசமான மனிதனுக்கு ஈடாக என்னை அவன் பழிக்கிறான். என் மீது அன்பு கொண்டவர்களை நான் சாத்தானின் கைகளில் ஒப்படைத்தால, நானும் அப்படிச் செய்ததாகவே ஆகும். ஆனால், நான் விசுவாசமுள்ளவனாக இருப்பதால், எனது அன்புக்குரிய பணியாளர்கள் ஒருவரையும் சாத்தான் தன் வசம் ஈர்த்துக்கொள்ள விடுவதிலை. சில வேளைகளில் என் நண்பர்களின் செயல்களும், எண்ணங்களும் மனச்சாட்சிக்கு விரோதமாக செய்வதைப்போல இருக்கும். அது அவர்கள் சாத்தானால் துன்புறுத்தப்படுவதாலோ, அல்லது. என் மீது கொண்டுள்ள அளவு கடந்த பக்தியாலோ அல்ல. மாறாக, அது அவர்களது மூளையில் ஏற்படும் சிறிய பாதிப்பாகவோ, அல்லது சொல்லக்கூடாத சில காரணங்களுக்காக தங்களைத் தாழ்த்திக் கொள்வதற்காகவோ இருக்கும்.

சில நேரங்களில் எனது நண்பர்களைத் தீண்டுவதற்கான அதிகாரத்தை என்னிடமிருந்து சாத்தான் பெற்றுக்கொள்கிறான். அது அவர்களது மேன்மைக்காகவோ, அல்லது சாத்தான் அவா;களது மனச்சாட்சியில் இருளைப் புகுத்துவதற்காகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், என் மீது முழு நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு எனது சித்தமே அவர்களது சித்தமென்று வாழ்வோரை சாத்தான் தன் வசம் ஒருக்காலும் ஈர்த்துக்கொள்ள முடியாது.

கிறிஸ்து தனது மணமகளிடம் உன்னதமானதொரு கோட்டையைப் பற்றி கூறுகிறார். இக் கேட்டையே திருச்சபையின் போராளியாகும். வணக்கத்துக்குரிய அன்னை கன்னி மரியாளின் செபங்களாலும், புனிதர்களின் செபங்களாலும் இது எவ்வாறு கடவுளின் திருச்சபையை மீண்டும் கட்டி எழுப்புகிறது என்றும் விளக்குகிறார்.

புத்தகம் 1 - அதிகாரம் 5
நானே அனைத்தையும் படைத்த கடவுள். நானே வல்லமை மிகுந்தவரும், வானதூதர்களின் அரசரும் ஆவேன். நானே எனக்காக உன்னதமானதொரு கோட்டையைக் கட்டி, அதில் என்னால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை அதில் வைத்தேன். ஆனால், என் பகைவர்கள் அக்கோட்டையின் அடித்தளத்தைச் சுரண்டி, அங்குள்ள எனது நண்பர்களின்மேல் தங்களது அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். என் நண்பர்களை மரத்தோடு இணைத்துக் கட்டப்பட்டவர்களைப்போலவும், தாங்கள் சொல்வதைச் செய்பவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். என் நண்பர்களின் வாய்கள் கற்களால் அடைக்கப்பட்டுள்ளது. பசியாலும் தாகத்தாலும் அவர்கள் வாடுகிறார்கள். மேலும், பகைவர்கள் எனது நண்பர்களது கடவுளை நிந்திக்கிறார்கள். என் நண்பர்கள் உதவிக்காக கையேந்துகிறார்கள், கதறுகின்றார்கள். எனது நீதி பழிக்குப்பழி வாங்கத் துடிக்கிறது ஆனால் எனது இரக்கம் என் பகைவர்களை மன்னிக்குமாறு கூறுகிறது.
அப்போது, கடவுள் தம்மோடு நின்றுகொண்டிருந்த விண்ணக ஆன்மாக்ளைப் பார்த்து, “எனது கோட்டையைக் கைப்பற்றிக்கொண்ட பகைவர்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்ட, அவர்கள் அனைவரும் ஒரேகுரலாக இணைந்து, “ஆண்டவரே, அனைத்து நீதியும் உம்மோடு உள்ளது. உம்மிலேதான் நாங்கள் அனைத்தையும் காண்கிறோம். துவக்கமும் முடிவுமில்லாத கடவுளின் மகனாகவும்,. மனிதர்களுடைய நீதிபதியாகவும் உள்ள உமக்கே தீர்ப்பளிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தனர். அப்போது அவர் “அனைத்தையும் என்னுள்ளே காண்கிறீர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருந்தாலும், எனது மணமகளுக்காக ஒரு முடிவைச் சொல்லுங்கள்” என்றார். அதற்கு அவர்கள் “அந்தக் கோட்டையைச் சுரண்டியவார்களுக்கு திருடர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையும், தீமையில் வாழ்பவர்களுக்கு அடுத்தவர்களுடைய சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையும் அளிக்கப்படவேண்டும். மேலும், இவர்களால் கைப்பற்றப்பட்டுள்ள அனைவருக்கும் விடுதலை கிடைக்கவேண்டும், பசியால் வாடும் இவர்கள் நிறைவு பெற வேண்டும்” என்று பதில் கூறினர்.

இதை அடுத்து, அதுவரை நடந்தவைகளை அமைதியாக கவனித்துக்கொண்டிருந்து கடவுளின் அன்னை மரியாள் “என் ஆண்டவரே, எனக்கு மிகவும் பிரியமுள்ள மகனே, நீரே எனது கருவில் உண்மையான கடவுளாகவும், மனிதனாகவும் இருந்தீர். மண்ணில் வாழ்ந்த இந்தக் கருவியை நீர் புனிதப்படுத்துவதற்காக வானின்று இறங்கி வந்தீர். உனது பகைவர்கள் மீது மீண்டும் மனமிரங்கும் என்று நான் தாழ்ச்சியோடு கேட்கிறேன்” என்றுரைத்தார்.

ஆண்டவர் தமது அன்னையை நோக்கி, “உமது வாயினின்று வந்த வார்த்தைகள் அர்ச்சிக்கப்படுவதாக! அவை நறுமணமாக கடவுளிடம் மேலோங்கிச் செல்கிறது. நீரே அருள் பெற்றவரும், வானதூதர்கள் மற்றும் புனிதர்களின் அரசியுமாவீர். ஏனென்றால் உம்மாள் கடவுள் ஆறுதல் பெற்றார்,. அனைத்து புனிதர்களும் பேரானந்தம் கொண்டனர். மேலும், நீர் சிறுவயது முதலாகவே என் சித்தமே உமது விருப்பமென்று வாழ்ந்தீர். ஆகவே, நீர் கூறியது போலவே நான் மீண்டும் செய்கின்றேன்” என்றுரைத்தார்.
அதன் பிறகு அவர் விண்ணக ஆன்மாக்களைப் பார்த்து, “நீங்கள் தைரியமா போராடியதால், உங்களது அன்பின் பொருட்டு, நான் மனமிரங்குகிறேன். உங்களது செபங்களின் வாயிலாக இக்கோட்டையை நான் மீண்டும் கட்டுவேன் என்று நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்”. தீயவர்களின் கட்டாயத்திற்கு ஆளாகி, துன்புற்றவர்களை நான் காப்பாற்றுவேன். அவர்களுக்கு கணமளிப்பேன். அவர்கள் அனுபவித்த வேதனைகளுக்கு நூறுமடங்காக அவர்களை மேன்மைப்படுத்துவேன். பயங்கரவாதத்தைத் தூண்டுபவர்கள்கூட எனது இரக்கத்திற்காக மன்றாடினால், அமைதியும் இரக்கமும் பெறுவார்கள்! இதை அவமதிப்பவர்களோ எனது நீதியை அனுபவிப்பார்கள்.
அதன் பிறகு, தனது மணமகளிடம் “எனது மணமகளே, உன்னை நான் தேர்ந்தெடுத்து, எனது ஆவியால் உன்னை அலங்கரித்துள்ளேன். நீ என் வார்த்தைகளைக் கேட்கின்றார், உனது விருப்பத்திற்காகவும், நீ நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவுமே என்னிலே அனைத்தையும் கண்டுணரும் புனிதர்கள் பேசினர். நீ உடலுள்ள மனிஷியாக இருப்பதால், விண்ணக ஆன்மாக்கள் என்னுள்ளே அனைத்தையும் காண்பதைப்போல நீ காண இயலாது. நான் பேசியவை எதைக் குறக்கின்றன என்பதை இப்போது நான் கூறுகிறேன். நான் கோட்டை என்று கூறியது, எனது இரத்தத்தாலும், புனிதர்களது இரத்தத்தாலும் நான் கட்டிய பரிசுத்த திருச்சபையைக் குறிக்கின்றது. எனது நேசக் கரங்களால் அதைப் பூசி, என்னால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும், நண்பர்களையும் அதில் வைத்தேன்.

”நீதியும் இரக்கமும் நிறைந்த நீதிபதி நாமே” என்ற விசுவாசமே இதன் அடித்தளம். இக்கோட்டையின் அடித்தளம் தற்போது சூரையாடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், எல்லோரும் நான் இரக்கமுள்ளவர் என்று நம்புகின்றனர். அதையே போதிக்கின்றனர். ஆனால், நான் உண்மையுள்ள நீதிபதி என்பதை எவரும் நம்புவதில்லை. என்னை ஒரு கெட்ட நீதிபதியாக நினைக்கின்றார்கள். தனது இரக்கத்தின் பொருட்டு, தீயவர்களைத் தண்டிக்காமல் அவர்கள் மேலும் தீமை செய்வதற்கு அனுமதிப்பது கெட்ட நீதியதியே. ஆனால், நீதியும் இரக்கமும் நிறைந்த நான், சிறிய பாவத்திற்கும் தண்டனை அளிக்காமல் இருப்பதில்ல. அதைப்போலவே, எந்த ஒரு நன்மைக்கும் அதற்கான வரங்களைக் கொடுக்காமல் இருப்பதுமில்லை.

அக் கோட்டை சூறையாடப்பட்டதால், பயப்படாமல் பாவம் செய்பவர்களும், எனது நீதியை மறுதலிப்பவர்களும், எனது நண்பர்களை துன்புறுத்தி, அவர்களை நற்செயல்கள் செய்யவிடாமல் தடுப்பவர்களும், பரிசுத்த திருச்சபைக்குள் அதிகமாக புகுந்துவிட்டனர். எந்தவித ஆறுதலும்,. மகிழ்ச்சியும் எனது நண்பர்களுக;கு கொடுக்கப்படுவதில்லை. மாறாக,. அவர்கள் தண்டிக்கப்பட்டு, அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள்.
அவர்கள் என்னைப் பற்றிய உண்மையைக் கூறும்போதெல்லாம், வாயடைக்கப்பட்டு வெளியில் வீசியெறியப்படுகிறார்கள். என் நண்பர்கள் என்னைப் பற்றிய உண்மைகளைக் கேட்பதற்கும்,. பேசுவதற்கும் ஏங்குகிறார்கள். ஆனால், அவர்கள் கூறுவதைக் கேட்பார் யாருமில்லை, அவர்களோடு உண்மையைப் பற்றி பேசுபவர்களும் இல்லை. இதற்கு மேலாக, அனைத்தையும் படைத்த கடவுளாகிய நான், தேவதூக்ஷனம் செய்யப்படுகிறேன். “கடவுள் இருக்கின்றாரா என்று எங்களுக்குத் தெரியாது, அப்படி இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று மக்கள் கூறுகிறார்கள். எனது படங்களைத் தரையில் தூக்கி எறிந்து, அதன் மீது ஏறி நின்றுகொண்டு, “ஏன் இவர் துன்புறவேண்டும்? இவர் துன்புற்றதால் எங்களுக்கு என்ன இலாபம்? எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தால் போதும், நாங்கள் திருப்த்தியடைவோம் - அவரது அரசையும், விண்ணகத்தையும் அவரே வைத்துக்கொள்ளட்டும்!” என்று கூவுகிறார்கள். நான் மனிதர்களுடைய மனதிற்குள் செல்ல விரும்புகிறேன். ஆனால், மக்கள் “எங்கள் விருப்பத்திற்கு மாறாக அவர் எங்கள் மனதிற்குள் வருவதற்கு முன்னதாகவே நாங்கள் சாக விரும்புகிறோம். என்று கூறுகிறார்கள்.
என் மணமகளே, இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் என்பதைப் பார்! நான் ஒரு வார்த்தையில் அவர்களைப் படைத்தததைப்போல, ஒரே வார்த்தையில் அவர்களை அழிக்கவும் முடியும். மக்கள் என் மீது எவ்வளவு வெறுப்பு கொண்டுள்ளனர் என்று பார்!! நீ எனது அன்னைக்கும், புனிதர்களுக்கும் அவர்களது செபங்களுக்காகவும் நன்றி சொல், ஏனென்றால் அவர்களது செபங்களின் பொருட்டே, நான் இப்போது இரக்கமும் பொறுமையும் கொணடு, அம் மக்களின் மீது எனது இரக்கம் மிகுந்த வார்ர்தைகளைப் பொழிய சித்தமாக இருக்கிறேன்.

அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் நான் சாந்தமடைவேன். இல்லையெனில், அவர்கள் எனது நீதித் தண்டனைக்கு உள்ளாவார்கள். திருடர்களைப்போல, பொது இடத்தில் வனதூதர்களுக்கு முன்பும், மனிதர்களுக்கு முன்பும் அவமானப்படுத்தப்பட்டு, அனைவரது கண்டனத்திற்கும் உள்ளாவார்கள். கொலையாளிகளைப்போல தூக்கிலிடப்படுவார்கள். காகங்கள் அவர்களது உடலைச் சூறையாடும். சாத்தானால் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவார்கள். தங்களது உடம்பு முழுவதும் வலியாலும், வேதனையாலும், மரத்தில் கட்டிவைக்கப்பட்ட மனிதர்களைப்போல் இடைவிடாமல் துடிப்பார்கள். கொதிக்கும் ஆறு அவர்கள் வாயில் பாயும், ஆனால் அவர்களது வயிறு நிரப்பப்படாது. மேலும், அவர்களது தண்டனை அனுதினமும் புதுப்பிக்கப்படும்.

ஆனால், எனது நண்பர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், எனது வாயனின்றுவரும் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். அவர்கள் எனது இரக்கம் மிகுந்த நீதியைக் காண்பார்கள். அவர்களை எனது அன்பான ஆடையால் போர்த்தி, அவர்களுக்கு பலம் அளிப்பேன். விசுவாசமற்ற பகைவர்கள் நீரில் களிமண் கரைவதைப்போல கரைந்து போவார்கள். எனது நீதியைக்காணும்போது, எனது பொறுமையை அவர்கள் அவதூறு செய்ததை நினைத்து அவமானத்தால் தலைகுனிவார்கள்”.

கிறிஸ்து இயேசு தமது மணமகளிடம் ஏன் அவரது தூய ஆன்மா தீயவர்களுக்குள் குடிகொள்ள இயலாது என்றும் நல்லவர்களிடமிருந்து தீயவர்களைப் பிரிப்பது பற்றியும் நல்லவர்களுக்கு ஆன்மீக போர் உடைகளை அணிவித்து அவர்களை இவ்வுலகிற்கு அனுப்புவது பற்றியும் கூறுகிறார்.


புத்தகம் 1 - அதிகாரம் 6
எனது பகைவர்கள் மிகக் கொடிய காட்டு விலங்குகள் போல நிறைவு பெறுவதுமில்லை ஓய்வு எடுப்பதுமில்லை. அவர்களது இதயம் எனது அன்பைப்பற்றி அறியாததால் அவர்களுக்கு எனது துயரமிக்க பாடுகள் கொஞ்சம் கூட நினைவுக்கு வருவதில்லை. அவர்களில் ஒருவரது இதயம் கூட ஒருமுறையேனும் ஆண்டவரே நீர் எங்களை மீட்டுக் கொண்டீர் உமது துயரமிக்க பாடுகளுக்காக நீர் போற்றப்படுவீராக! என்ற வார்த்தைகளை தப்பித் தவறிக்கூட கூறியதில்லை. என்மீது தெய்வீக அன்பில்லாத எதிரிகளின் இதயங்களில் என் ஆன்மா எவ்வாறு குடிகொள்ள முடியும்? இவர்கள் தங்கள் விருப்பத்திற்காக அடுத்தவர்களுக்கு எளிதாக நம்பிக்கை துரோகம் செய்கிறார்களே! அவர்களின் இதயம் உலக ஆசையெனும் வஞ்சகப் புழுக்களால் நிறைந்துள்ளது.
சாத்தான் அவனது தீமைகளை அவர்களது வாயில் வைத்துள்ளான். அதனால் என் வார்த்தைகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் போனது. மேலும் என் எதிரிகளை என் நண்பர்களிடமிருந்து இரம்பத்தால் அறுப்பதைப்போல அறுத்து எடுக்க வேண்டியுள்ளது. இரம்பத்தால் அறுபட்டுச் சாவதைவிட கொடுமையான சாவு வேறெதுவுமில்லை. அவர்கள் அனைத்துவித தண்டனைகளுக்கும் ஆளானவர்கள், சாத்தான் அவர்களை இரம்பத்தால் அறுப்பான் என்னிடமிருந்தும் அவர்கள் அறுபட்டுப் போவர்கள் ஆகவே இரண்டு பக்கமும் அறுபடுவார்கள். என் எதிரிகளால் அவர்களைச் சேர்ந்தவர்களும் என்னிடமிருந்து அறுபட்டுப்போவதால் அவர்கள் எனது மிகுதியான வெறுப்புக்குள்ளானவர்கள்.

இக் காரணங்களுக்காகவும் சாத்தான் எனது உண்மையான பகைவனாக இருப்பதாலும் அவனிடமிருந்து என் மக்களை பிரிப்பதற்காக நான் எனது நண்பர்களை அனுப்புகின்றேன். அவர்களை போருக்குப் புறப்படும் படை வீரர்களைப்போல அனுப்புகிறேன். தீயவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எனக்காக தன்னுயிரைத் தருபவரே எனது உண்மையான படைவீரர். என் வாயினின்று வரும் வாரத்தைகளை அவரகள் ஈட்டியாகப் பயன்படுத்துவாரகள் அவரகளது கைகளில் நம்பிக்கை என்னும் போரவாளை வைத்திருப்பார்கள். அவர்களது மார்பு எனது அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்து இருப்பதால் என்ன நடந்தாலும் என் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு குறைந்துவிடாது. நடப்பவை அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள பொறுமை என்னும் பாதுகாப்பு கவசத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். தங்கத்தைப் பாதுகாப்பது போல நான் அவர்களை மூடி வைத்துள்ளேன்: இப்போது எனது வழியில் அவர்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்.

நீதிமுறைகளின்படி நான் மனிதனாகப் பிறந்து பாடுகளை அனுபவிக்காமல் இருந்திருந்தால் மேன்மை மிகுந்த எனது அரசாட்சியில் நானே நுழைந்திருக்க முடியாமல் போயிருக்கும். அப்படியிருக்க என் நண்பர்கள் எப்படி நுழைய முடியும்? அவர்களது ஆண்டவரான நானே துன்பத்திற்குள்ளானேன் அப்படியிருக்க அவர்கள் துன்பப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

அவர்களது ஆண்டவரான நான் சாட்டையால் அடிக்கப்பட்டேன் என்றால் அடுத்தவர் கூறும் வார்த்தைகளால் அவர்கள் அடிபடுவது ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை ஏனென்றால் நான் அவர்களைக் கைவிடுவதில்லை.


சாத்தானால் கடவுளது இதயத்தை எடுக்கவோ அவரிடமிருந்து அதைப் பிரிக்கவோ இயலாது. அதைப்போலவே என்னிடமிருந்து அவன் என் மக்களைப் பிரித்தெடுக்க முடியாது. எனவே எனது பார்வையில் என் நண்பர்கள் தூய தங்கத்திற்கு ஈடானவர்கள் சிறிதளவு நெருப்பில் அவர்கள் சோதிக்கப்பட்டாலும் அவர்களை நான் கைவிடுவதில்லை அவ்வாறு சோதிக்கப்படுவது அவர்களது மேன்மைக்கான செயலாகும்.

மகிமைக்குறிய கன்னித்தாய் மரியாள் தமது மகள் பிரிஜிட்டா எப்படி உடை மற்றும் ஆபரணங்களை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் எவ்வகையான உடைகளையும் அணிகலன்களையும் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியவை.


புத்தகம் 1 - அதிகாரம் 7
மரியாள் என்ற நானே கடவுளின் மகனும் உண்மையான கடவுளும் மனிதனுமானவருக்கு பிறப்பு கொடுத்தவள். நானே வானதூதர்களின் அரசி. என் மகன் உன்னை தமது முழு இதயத்தோடு அன்பு செய்கின்றார. நீயும் அவரை அன்பு செய்! எனவே மிகவும் தூய்மையான உடைகளை நீ அணிந்துகொள்ள வேண்டும் அவை எப்படிப்பட்டவை என்றும் அவற்றை நீ எவ்வாறு அணிந்துகொள்ள வேண்டுமென்றும் நான் கூறுகிறேன். நீ எவ்வாறு உள்ளாடை மேலாடை காலணி முக்காடு மற்றும் மேலாடையில் அழகிற்காக அணியும் புரூச்பின் ஆகியவற்றை அணிந்து கொள்கிறாயோ அதேபோல ஆன்மீக ஆடைகளையும் கட்டாயமாக அணிந்து கொள்ளவேண்டும்.
உள்ளாடை என்பது பாவங்களுக்காக மனம் வருந்துவதைக் குறிக்கிறது. உள்ளாடை உடம்போடு ஒட்டிக்கொண்டிருப்பதைப்போல மனம் வருந்துவதும் ஒப்புறவு (பாவசங்கீர்த்தனம்) செய்து மனமாற்றம் பெறுவதும் கடவுளோடு இணைவதற்கான வழிகளாகும். இதன் மூலமாக பாவத்திலிருந்து உனது உள்ளம் தூய்மைப் படுத்தப்படுகிறது.

பாவம் செய்த உடலுறுப்புக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டு காலணிகள் இரண்டு காரியங்களைக் குறிக்கின்றன ஒன்று தவறான பாதையில் போகாமல் தன்னைத் திருத்திக்கொள்ளத் துடிக்கும் மனதையும் மற்றொன்று தீமைகளை விட்டுவிட்டு நற்செயல்களில் ஈடுபடத் தூண்டும் மனத்தையும் குறிக்கின்றது. கடவுளின் மீது வைத்துள்ள நம்பிக்கையே உனது மேலாடையாகும்.

மேலாடையில் இரண்டு கைகள் இருப்பதுபோல உனது நம்பிக்கையானது நீதியோடும் இரக்கத்தோடும் திகழ வேண்டும். இவ்வாறாக நீ கடவுளின் இரக்கத்தை நம்புவதால் அவரது நீதியை புறக்கணியாதிருப்பாய். கடவுளின் நீதியையும் அவரது நீதித் தீர்ப்பையும் நினைவில் கொள் ஏனெனில் அவர் இரக்கமின்றி நீதி வழங்குவதில்லை நீதியற்ற இரக்கமும் அவரிடம் இல்லை.
விசுவாசமே நீ அணியும் முக்காடு. முக்காடு உனது உடலை மூடிக்கொள்கிறது. முக்காட்டிற்குள் உன் உடல் மூடப்படுகிறது. அதுபோலவே மனித இயல்பு விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டது அதன் மூலமே அனைத்தையும் பெற்றுக்கொள்கிறது. விசுவாசம் என்ற முக்காடு உனது மணவாளரின் அடையாளங்களான அவரது அன்பு அவர உன்னைப் படைத்த விதம் அவர உன்னை மீட்ட விதம் அவர் உன்னை தேற்றிய விதம் அவரது ஆன்மாவை உனக்குக் கொடுத்த விதம் மற்றும் அவர உனது ஆன்மீகக் கண்களை திறந்த விதம் ஆகியவற்றை ஆபரணங்களாக அணிந்து கொள்ளவேண்டும்.
அவரது பாடுகளின் நினைவுகளே உனது மேலாடையில் அணிந்து கொள்ளும் புரூச்பின் ஆகும். அவர நிந்திக்கப்பட்டதையம் சிலுவையின் அடியில் அவமானத்துடன் நின்றதையும் உடம்பெல்லாம் இரத்தம் வழிய அவரது சதைகள் கிழிக்கப்பட்டதையும் அவர் தமது ஆவியை தந்தையாம் கடவுளிடம் ஒப்படைத்ததையும் உனது மார்பில் நன்றாகப் பதித்துக் கொள். இந்த அழகிய அணிகலன் உனது மார்பின் மீது எப்போதும் இருக்கட்டும்! உனது தலையில் கற்பு என்னும் கிரீடத்தை அணிந்து கொள்.
மீண்டும் மாசுபடுவதைவிட கசையடியை சகித்துக்கொள்ளும் மனது மேலானது. உனது அன்பு தூய்மையானதாக இருக்கவேண்டும். நீ தாழ்ச்சியாகவும் தகுதியுள்ளவளாகவும் இருக்க வேண்டும். எதைப் பற்றியும் நினையாமல் உனது கடவுளை உன்னைப் படைத்த கடவுளை மட்டுமே நினைவில் கொள். நீ அவரை அடைந்திருப்பது அனைத்தையும் அடைந்திருப்பதற்குச் சமமாகும். இவ்வாறு உனது ஆன்மீக ஆடைகளை அணிந்துகொண்டு உனது மணவாளருக்காக காத்திரு.

வானதூதர்களின் அரசியான அன்னை மரியாள் தனது மகனை பிரிஜிட்டா எவ்வாறு அன்பு செய்ய வேண்டுமென்றும் தன்னோடு இணைந்து எப்படி அவருக்கு புகழ்பாட வேண்டுமென்றும் கற்றுத் தருகிறார்.


புத்தகம் 1 - அதிகாரம் 8

நானே விண்ணக அரசி. என்னை எப்படிப் புகழ்வது என்பதைப் பற்றி கவலைப் படுகின்றாய். எனது மகனுக்குச் செலுத்தும் புகழ்ச்சியாவும் எனக்குக் கொடுக்கும் புகழ்ச்சியே என்பதை திண்ணமாக அறிந்துகொள். அவரை அவமதிப்பவர்கள் என்னையும் அவமதிக்கின்றனர் ஏனென்றால் அவர் என்மீது கொண்டுள்ள அன்பும் நான் அவர்மீது கொண்டுள்ள அன்பும் மிகவும் ஆழமானது இருவரது இதயமும் ஒன்றுதான். மண்ணில் அவரது கருவியாக இருந்த என்னை வானதூதரகளுக்கும் மேலாக உயர்த்தி மேன்மைப்படுத்தினார்.

எனவே என்னை புகழும்போது கடவுளே அனைத்தையும் படைத்தவரே கன்னி மரியாளின் கருவறையில் தங்குவதற்காக வானின்று இறங்கி வந்தவரே நீர் அர்ச்சிக்கப்படுவதாக. கடவுளே கன்னி மரியாளுக்கு எந்தவித பாரமாகவும் இல்லாமல் பாவமின்றி மாசற்ற மனித உருவெடுக்க சித்தம் கொண்டவரே நீர் போற்றப்படுக. கடவுளே கன்னி மரியாளிடம் வந்து அவளது உள்ளத்திற்கும் உடலுக்கும் பேரானந்தத்தைக் கொடுத்து பாவமில்லாமல் அவளது உடலிலிருந்து வெளி வந்தவரே நீர் அர்ச்சிக்கப்படுவதாக.
கடவுளே நீர் விண்ணேற்றம் அடைந்தபிறகு உமது அன்னையாம் கன்னி மரியாளின் சந்தோஷத்திற்காக பலமுறை அவளைச் சந்தித்து ஆறுதல் அளித்தவரே நீர் அர்ச்சிக்கப்படுவதாக. கடவுளே உமது தாயாம் கன்னி மரியாளை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணிற்கு எடுத்துச் சென்று உமது தெய்வீகதிற்கு அடுத்ததாக அவளை அமர்த்தி வானதூதர்களுக்கும் மேலாக அவளை உயர்த்தியவரே நீர் அர்ச்சிக்கப்படுவதாக. கடவுளே! அன்னை மரியாளின் செபங்களின் பொருட்டு என்மீது இரக்கமாயிரும்! என்று கூறி புகழ்பாடு என்று கற்பித்தார்.

விண்ணகத்தின் அரசி தமது அன்புக்குரிய மகளிடம் தமது மகன் கன்னித் தாயான தம்மீது வைத்திருந்த அருமையான அன்பைப்பற்றியும் கிறிஸ்துவின் தாய் தனது தாயான அன்னம்மாளின் கற்புள்ள திருமணத்தால் கருவுற்றதையும் அக்கரு எவ்வாறு அர்ச்சிக்கப்பட்டது என்பதையும் எப்படி தமது ஆன்மாவோடும் உடலோடும் விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பதையும் மரியாள் என்ற தமது பெயருக்குள்ள வல்லமையும் மற்றும் நன்மைக்கும் தீமைக்கும் கொடுக்கப்பட்டுள்ள வானதூதர்களைப் பற்றியும் கூறுகிறார்.


புத்தகம் 1 - அதிகாரம் 9
நானே விண்ணகத்தின் அரசி. எனது மகனை அன்பு செய் ஏனென்றால் அதற்கு அவர் மிகவும் தகுதியானவர். அவரை நீ பெற்றிருக்கும்போது தகுதியுள்ள அனைத்தையும் பெற்றுக் கொண்டதற்குச் சமமாகும். அவர் மிகவும் விரும்பத்தக்கவர் அவரை நீ விரும்பும்போது நீ விரும்புகின்ற அனைத்தையும் பெற்றிருக்கின்றாய். அவரை அன்பு செய் ஏனெனில் அவர் மிகுந்த நற்குணமுள்ளவர் அவரை நீ அன்பு செய்யும்போது அனைத்து நற்குணங்களும் உன்னை வந்தடைகின்றன்.

எனது ஆன்மாவின் மீதும் உடலின் மீதும் அவர கொண்டிருந்த அருமையான அன்பைப் பற்றியும் அவர் எனது பெயருக்குக் கொடுத்துள்ள வணக்கத்தைப் பற்றியும் கூறுகிறேன் கேள். எனது மகன் நான் அவரை அன்பு செய்வதற்கு முன்னரே என்னைப் படைத்ததன் மூலம் என்னை அன்பு செய்தார். அவரே எனது பெற்றோரின் திருமணத்தில் இணைந்து கொண்டார். எனது பெற்றோர்களைப்போல மிகவும் கற்புள்ள பெற்றோரை யாரும் காண முடியாது.

அவர்கள் விதிகளை மீறி இணைந்தது கிடையாது. மேலும் உருவாக்குவதற்கேயன்றி வேறு எந்த ஆசைக்காகவும் அவர்கள் இணைந்ததில்லை. வானதூதர் எனது பெற்றோருக்குத் தோன்றி தங்களிடமிருந்து பிறக்கவிருக்கும் கன்னியின் வழியாக உலக மீட்பு பிறக்கவிருக்கிறது என்று அறிவித்தது முதல் அவர்களிடமிருந்து இச்சை அழிந்துபோனது. இச்சைக்காக ஒன்று சேர்வதைவிட சாவதே மேலென்று விரும்பினாரகள். வானதூதர் அறிவித்ததன் பொருட்டு தெய்வீக சித்தத்திற்காகவும் கடவுள் மீது அவரகள் கொண்டிருந்த பேரன்பிற்காக மட்டுமே அவர்கள் உடலால் ஒன்று சேர்ந்தனர் வேறு எந்தவித இச்சைக்காகவும் அல்ல என்பது திண்ணம்.
இவ்வாறாக தெய்வீக அன்பினால் எனது கரு உருவாக்கப்பட்டது. எனது உடல் உருவானபோது கடவுள் தாம் படைத்த ஆன்மாவை அவரது தெய்வீகத்தினின்று எனக்குள் வைத்தார். அந்த ஆன்மா என் உடலுடன் இணைந்து பரிசுத்தப்படுத்தப்பட்டது. கருவிலிருந்த என்னை வானதூதர்கள் கண்காணித்தனர். இரவும் பகலும் என்னைப் பாதுகாத்தனர். எனது ஆன்மா எனது உடலோடு இணைந்து பரிசுத்தப்படுத்தப்பட்டபோது எனது தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தப் பேரானந்தத்தை வரணிக்க இயலாது. பிறகு எனது உயிர் முழுமை அடைந்தபோது கடவுள் என் உடலிலிருந்து எனது ஆன்மாவை எடுத்து தமது தெய்வீகத்திற்கு அடுத்தபடியாக வேறு எவருக்கும் கிடைக்காத மேலான இடத்தில் வைத்தார். எனவே எனது உடல் அவரால் படைக்கப்பட்ட வேறெந்த உடலையும் விட நெருக்கமாக அவரது பக்கத்தில் வைக்கப்பட்டது. என் மகன் எனது ஆன்மாவையும் உடலையும் எவ்வளவு அதிகமாக அன்பு செய்யதார் என்பதைப் பார்!
இவ்வாறாக என் ஆன்மாவையும் உடலையும் நான் பெற்றிருக்கும்போது சிலர் இதைக் கடுமையாக மறுக்கின்றனர் மேலும் சிலர் இதைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளவில்லை. ஆனால் எனது ஆன்மாவோடும் உடலோடும் கடவுளிடம் நான் எடுத்துக்கொள்ளப்பட்டது முற்றிலும் உண்மையானது. என் மகன் எனது பெயரை எவ்வளவு வணக்கத்துக்குரியதாகச் செய்தார் என்பதைப்பற்றி கூறுகிறேன் கேள்! பரிசுத்த வேதாகமம் சொல்வதைப்போல எனது பெயர் மரியாள். எனது பெயரைக் கேட்டவுடனே வானதூதர்கள் பேருவகை கொண்டு கடவுளுக்கு நன்றி கீதம் பாடுகின்றனர்.

ஏனென்றால் என் மீதும் எனது வழியாகவும் அவர் பேரிரக்கத்துடன் செயலாற்றினார். அதனால் மனித உருவெடுத்த எனது மகன் கடவுளது தெய்வீகத்தில் மேன்மைப்படுத்தப்படுவதை வானதூதர்கள் காண்கின்றனர். நோயுற்று படுத்தபடுக்கையாய் இருக்கும் ஒருவர் மற்றவர்கள் கூறும் ஆதரவான வார்த்தைகளைக் கேட்கும்போது எவ்வாறு உள்ளம் மகிழ்ந்து அமைதியடைகின்றதோ அதைப்போலவே உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களும் எனது பெயரைக் கேட்டவுடன் அளவுகடந்த பேருவகையால் அக்களிக்கின்றனர்.

எனது பெயர் உச்சரிக்கப்படும்போது நல்ல சம்மனசுக்கள் தாங்கள் காவல் தூதர்களாக வழிநடத்தும் நல்ல ஆன்மாக்களுக்கு நெருக்கமாகச் சென்று அந்த ஆன்மாக்களின் முன்னேற்றத்தின் பொருட்டு பேருவகை கொள்கின்றனர்.

நல்ல சம்மனசுக்கள் மனிதர்களைக் காவல் காப்பதற்கும் கெட்ட சம்மனசுக்கள் அவர்களைச் சோதிப்பதற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் வானதூதர்கள் கடவுளிடமிருந்து பிரிக்கப்படுவதில்லை மாறாக கடவுளோடு அவரது பிரசன்னத்தில் எப்போதும் இருந்துகொண்டு ஆன்மாக்களின் நற்குணங்களை சுவாலைபோல பற்றி எரியச் செய்கின்றனர். நன்மை செய்வதற்கு அவர்களைத் தூண்டுகின்றனர். என் பெயரைக்கேட்டதும் சாத்தான் அடங்கி நடுநடுங்குவான். மரியாள் என்ற எனது பெயர் ஒலிக்கும்போதெல்லாம் தன் பிடியிலிருக்கும் ஆன்மாக்களை சாத்தான் விட்டுவிடுகிறான். எவ்வாறு பறவையானது சத்தத்தைக் கேட்டவுடன் தனது அலகையும் இறக்கைகளையும் உண்டுகொண்டிருந்த உணவை விட்டுவிட்டு பறந்து சென்றுவிட்டு மீண்டும் அதைத் தேடி வருவதைப்போல சாத்தானும் தான் விட்டுச்சென்ற ஆன்மாவை நோக்கி ஈட்டியைப்போல திரும்பி வருகிறான்.
அந்த ஆன்மா எந்தவித மன மாற்றமும் அடையாமல் இருந்தால் அதை ஆட்கொள்ளவே மீண்டும் வருகிறான். கடவுளுடைய அன்பில் எவரும் குறைந்தவரல்ல. மரியாள் என்ற எனது பெயரை உச்சரித்து இனி தீயனவற்றிற்கு மீண்டும் ஆளாகிவிடக் கூடாது என்று என்னும் ஆன்மாக்களை சாத்தான் எளிதாக விட்டுவிடுவதுமில்லை அதேபோல மீண்டும் பாவம் செய்யும் எண்ணம் வரும்வரை அந்த ஆன்மாவை நெருங்குவதும் இல்லை.
சில வேளைகளில் அந்த ஆன்மாவின் மேன்மைக்காகவே சாத்தானுக்கு சோதிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த ஆன்மாவை தன் வசம் ஈர்த்துக்கொள்வதற்கல்ல என்பதைத் தெரிந்துகொள்.

அன்னை மரியாள் கிறிஸ்துவின் பாடுகளைப்பற்றி பல அதிசயமான விளக்கங்களைத் தந்து தனது மகள் பிரிஜிட்டா எவ்வாறு கிறிஸ்துவிற்காக வாழ வேண்டுமென்று கூறுகிறார்.


புத்தகம் 1 - அதிகாரம் 10

நானே வானதூதர்களின் அரசி கடவுளின் தாய். உனது மார்பின்மீது அழகிய புரூச்பின்னை அணிந்துகொள்ள வேண்டுமென்று கூறியது நானே. கடவுள் இருக்கின்றார் என்பதை எனது குழந்தைப் பருவத்திலிருந்து முழுமையாக எவ்வாறு நான் தெரிந்துகொண்டேன் என்பதைப் பற்றி உனக்கு எடுத்துரைக்கப் போகிறேன். நான் எப்போதுமே எனது மீட்பைப் பற்றியும் திருச்சபையின் கடமைகளைக் கடைபிடிப்பதைப் பற்றியும் அதிக கவனமாக இருப்பேன். மேலும் கடவுள்தான் என்னைப் படைத்தவர் என்றும் எனது ஒவ்வொரு செயலுக்கும் காரணகர்த்தா அவரே என்றும் முழுமையாக தெரிந்துகொண்டதிலிருந்து அவரை ஆழமாக அன்பு செய்ய ஆரம்பித்தேன் மேலும் நான் செய்யும் ஒவ்வொரு செயலும் பேசும் வார்த்தையும் அவருடைய கோபத்திற்கு உள்ளாகாதவாறு பார்த்துக்கொண்டேன். கடவுள் தனது மக்களுக்கு சட்ட திட்டங்களைக் கொடுத்து அவர்கள் மூலமாகவே பல அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதைத் தெரிந்துகொண்ட நாள் முதல் அவரை மட்டுமே அன்பு செய்யவது என்கின்ற தீர்மானத்தை எனது ஆன்மாவில் எடுத்துக்கொண்டேன். இவ்வுலக ஆசைகள் அனைத்தையும் குப்பையாக நினைத்தேன்.

இவ்வுலகை மீட்பதற்காக கன்னியின் வயிற்றிலிருந்து கடவுள் மனிதனாகப் பிறப்பார் என்று தெரிந்துகொண்டவுடன் அவர்மீது எனக்கிருந்த அன்பு பற்றி எரிந்தது அதாவது கடவுளைத் தவிர வேறு எவரையும் நினைக்கவோ விரும்பவோ என் மனம் இடம் கொடுக்கவில்லை. என்னால் முடிந்தவரை எனது பெற்றோர் மற்றும் நண்பர்களோடு பேசுவதிலிருந்தும் அவர்கள் மத்தியில் இருப்பதிலிருந்தும் விலகி என்னைத் தனிமைப் படுத்திக்கொண்டேன் என்னிடம் இருந்த அனைத்தையும் தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்தேன். மிக அவசியமான உடைகளையும் குறைந்த உணவையுமே வைத்துக்கொண்டேன். கடவுள் ஒருவரே என்னை மகிழ்விப்பவராக இருந்தார். கடவுள் மனிதானாகப் பிறக்கும் காலம் வரை நான் வாழ வேண்டுமென்று மிகுந்த ஆவல் கொண்டேன். ஆனால் தகுதியற்ற நானே அவருக்கு அன்னையாகும் பாக்கியம் பெற்றேன்.
நான் எனது கன்னிமையைக் காப்பாற்ற வேண்டுமென்று உறுதிகொண்டேன் அதுவே கடவுளின் விருப்பமானால் அதற்காக இவ்வுலகத்தில் எதைவேண்டுமானாலும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தேன். ஆனால் அவரது விருப்பம் எதுவாக இருந்தாலும் எனது விருப்பத்திற்காக இல்லாமல் அவரது விருப்பப்படியே நடக்க விரும்பினேன். ஏனென்றால் அவரால் எதையும் செய்ய முடியுமென்றும் எனக்கு எது மிகவும் நன்மை வாய்ந்ததோ அதையே அவர் கொடுப்பார் என்றும் முழுமையாக நம்பினேன். எனவே எனது விருப்பங்களை முழுமையாக அவரிடம் ஒப்படைத்தேன்.
கன்னிப் பெண்களை கடவுளுக்கு அரப்பணிக்கும் காலம் வந்தபோது எனது பெற்றோரும் என்னை கோவிலுக்குக் அழைத்துச் சென்றனர். அவர்களோடு இணைந்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களது கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தச் சடங்கு நடந்தது. நான் கடவுளை மட்டுமே விரும்புகிறேன் அவரை மிகவும் ஆசிக்கின்றேன் என்பது கடவுளுக்கு நிச்சயமாகத் தெரியும் என்பதால் எனது கன்னிமையை அவர் காக்க வேண்டும் என்று ஆசித்தேன்.
ஆனால் அவரால் முடியாதது எதுவுமில்லை என்பதால் எனது விருப்பம் அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவரது சித்தப்படியே ஆகட்டும் என்று எண்ணினேன். கோவிலில் கூறிய அனைத்து கட்டளைகளையும் நன்கு கேட்டறிந்தபின் வீட்டிற்குத் திரும்பி வந்தேன். அன்றுமுதல் கடவுள் மீது எனக்கிருந்த அன்பு இன்னும் அதிகமாகப் பற்றி எரிந்தது. தினமும் அது மேலும் அதிகமாக பற்றி எரியவேண்டுமென்று என் மனம் மிகுந்த ஆவல் கொண்டது.

எனவே இன்னும் அதிகமாக என்னைத் தனிமைப் படுத்திக்கோண்டேன் நான் பேசுவதிலும் கேட்பதிலும் செய்வதிலும் தீயவை இருந்துவிடலாம் என பயந்து இரவும் பகலும் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தனிமையாகவே இருக்க விரும்பினேன். எனது அமைதியிலும் கூட நான் தீயனவற்றை நினைத்துவிடுவேனோ அதைப்பற்றி பேசிவிடுவோனோ என்று பயந்துகொண்டிருந்தேன்.

நான் கடவுள் மீது முழு நம்பிக்கையோடு என்னையும் எனது ஆன்மாவையும் கட்டுப்படுத்தவேண்டுமென்று நினைத்து அங்கலாயித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளையில் கடவுளின் வல்லமையும் அவர் வானதூதர்களைப் படைத்ததும் வானதூதர்கள் அவருக்கு முடிவில்லா ஆராதணை செலுத்துவதும் என் நினைவில் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறு நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மூன்று அதிசயங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று நட்சத்திரம் அது வானத்திலிருந்து ஔ வீசும் நட்சத்திரத்தைவிட வித்தியாசமாக இருந்தது.
இரண்டாவதாக ஒளி இதுபோன்ற ஒளியை இவ்வுலகில் கண்டதே இல்லை. மூன்றாவதாக நறுமணம் இப்படியொரு நறுமணத்தை இவ்வுலகில் சுவாசிக்கவே முடியாது அந்த அளவிற்கு அது மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த அனுபவத்தில் மூழ்கியிருந்த நான் குதித்து ஆடிப்பாட வேண்டும்போல் இருந்தது. அப்போது நான் ஒரு குரலைக் கேட்டேன் ஆனால் அது மனிதன் வாயிலிருந்து வரவில்லை. இதைக் கேட்டவுடன் இது மாயமாக இருக்குமோ என்று நான் மிகவும் பயந்தேன். அப்போது கடவுளின் தூதர் எனக்கு முன் தோன்றினார் மனித உருவிலிருந்த அவருக்கு உடலில்லை.
அவர் என்னிடம் அருள் நிறைந்தவளே வாழ்க! என்றுரைத்தார். இதைக் கேட்டவுடன் இந்த வாழ்த்து எத்தகையதோ இதற்கு என்ன பொருள் இந்த வாழ்த்திற்கும் வேறு எந்தவித நன்மைக்கும் நான் தகுதியில்லாதவள் ஆயிற்றே என்று நினைத்தேன் அதேவேளையில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதையும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு அந்த வானதூதர் உமக்குப் பிறக்கப்போகும் குழந்தை தூயது அது கடவுளின் மகன் எனப்படும். இவை கடவுளின் சித்தப்படி நடக்கும் என்றார். இதைக் கேட்டவுடன் இதற்கு நான் தகுதியானவள் என்று நினைக்கவில்லை. அந்த வானதூதரிடமும் எப்படி எப்போது நிகழும் என்று கேட்கவும் துணியவில்லை. எனவே இது எவ்வாறு நிகழும் நான் கணவனை அறியேனே கடவுளுடைய தாயாவதற்கு நான் தகுதியற்றவள் என்று அந்த வானதூதரிடம் கூறினேன். அதற்கு அந்த வானதூதர் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை எனவே இது அவரது சித்தம் என்று பதிலளித்தார்.

இவ் வார்த்தைகளைக் கேட்டவுடன் நான் கடவுளின் தாயாவதற்கு அளவுகடந்த ஆசை கொண்டேன் எனது மனம் பேருவகையால் துள்ளியது கடவுள் மீது கொண்டிருந்த அன்பின் பொருட்டு எனது உள்ளம் அக்களித்தது. எனவே இதோ ஆண்டவரின் அடிமை அவரது வாரத்தையின்படியே எனக்கு ஆகட்டும் என்று எனது வாய் பேசியது. நான் அவ்வாறு பதில் கூறிய ஒரு நொடிப்பொழுதில் எனது மகன் எனது உதிரத்தில் கருவானார். இந்த அனுபவம் விவரிக்க இயலாதது எனது உள்ளமும் எனது உடலிலுள்ள ஒவ்வொரு அங்கமும் அக்களிப்படைந்தது. அவரை எனது கருவில் தாங்கியபோது எந்ததொரு வலியையும் வேதனையையும் பாரத்தையும் நான் உணரவில்லை. நான் தாங்கியிருப்பது அனைத்து வல்லமையும் பொருந்தியவர என்பதால் என்னை நானே மிகவும் தாழ்த்திக் கொண்டேன்.

அவர் எவ்வாறு என் உதிரத்தில் கருவுற்றாரோ அதேபோலவே அவர் பிறக்கும்போதும் பாவமும் வலியும் ஏதுமின்றி எனது வயிற்றினின்று வெளிவந்தார். காற்றில் பறப்பதுபோல எனது உள்ளம் அக்களித்தது. பேரானந்தம் என்னை ஆட்கொண்டது. அவர் எனது உடலில் வந்தபோது என் அங்கமெல்லாம் எப்படி அக்களித்ததோ அதே போன்ற அனுபவம்தான் அவர் என் உடலிலிருந்து வெளியில் சென்றபோதும் இருந்தது. இதனால் எனது கன்னிமைக்கு எந்த ஒரு கலங்கமும் ஏற்படவில்லை.
இவரைப் பெற்றெடுக்கும் தகுதி எனக்கில்லை என்பதை உணர்ந்தபோதிலும் அவரது அழகை நான் கண்டபோது என் ஆன்மாவில் தேன் வந்து பாய்வதைப்போன்ற ஆனந்தமடைந்தேன். அழகான இவரது கைகளும் கால்களும் சிலுவை மீது ஆணிகளால் அறையப்படும் என்று இறைவாக்கினரகள் கூறியதை நான் நினைத்தபோது என் கண்கள் கண்ணீர் வெள்ளமாயின அந்த துக்கமானது எனது இதயத்தில் முள்ளாய்க் குத்தியது. என் மகன் கண்ணீர் நிறைந்த என் கண்களைப் பார்த்து மிகவும் துயரமடைந்தார். அவரது தெய்வீக ஆற்றலைக் கண்டுணர்ந்தபோது நான் ஆறதலடைந்தேன். இதுவே அவர் விரும்பிய வழி என்றும் இதுவே சரியான வழி என்றும் புரிந்துகொண்டு எனது எல்லாவித விருப்பங்களையும் அவரது சித்தத்திற்காகவே ஒப்புக்கொடுக்க உறுதி கொண்டேன். எனவே என் ஆனந்தமானது எப்போதும் துயரங்கள் கலந்ததாகவே இருந்தது.
எனது மகன் பாடுபடும் நேரம் வந்தபோது அவரது பகைவர்கள் அவரைக் கைதுசெய்தனர். அவர்கள் அவரது கன்னத்திலும் கழுத்திலும் அறைந்தார்கள் அவரது முகத்தில் துப்பி எள்ளி நகையாடினார்கள். கற்றூனில் கட்டி அடிக்கப்படும் இடத்திற்கு வந்தவுடன் அவர் தமது உடைகளைக் தாமாகவே களைந்து விட்டு தமது கைகளை அந்தத் தூணின் மீது வைத்தார். அதன்பிறகு அவரது பகைவரகள் இரக்கமின்றி அவரது கைகளை அங்கிருந்த தூணில் இறுகக்கட்டிப் போட்டனர். அவர் எந்த ஒரு ஆடையுமில்லாமல் நிரவாணமாக்கப்பட்டார். பிறந்தமேனியாக நின்ற அவர் அனைத்து அவமானங்களையும் தாங்கிக்கொண்டார். அவரது நண்பர்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர் ஆனால் அவரது பகைவர்களோ அவருக்கு எதிராக செயல்பட ஆயத்தமாகினர்.

அவர்கள் அவரைச் சுற்றி நின்றுகொண்டு எந்தப் பாவமும் பாவக் கறையுமில்லாத தூய உடலை கிழித்துப் போட்டனர். நானும் அங்கு நின்றுகொண்டிருந்தேன் அவர் மீது விழுந்த முதல் சாட்டை அடியில் மயங்கி விழுந்து இறந்தவளைப் போலானேன். நான் மீண்டும் எழுந்தபோது அவரது உடல் முழுவதும் சாட்டையால் அடிக்கப்பட்டு கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அவரகள் அந்த சாட்டையை அவரது உடலிலிருந்து உருவியபோது அவரது சதை கிழிக்கப்பட்டது மிகவும் கொடூரமாக இருந்தது. அவரது உடல் முழவதும் ஒரு இடம் விடாமல் சாட்டையால் அடித்து கிழிக்கப்பட்டிருப்பதைக்கண்டு அங்குவந்த ஒரு மனிதன் இவனை மரண தண்டனைக்கு உட்படுத்தாமல் இப்போதே கொன்றுவிடப் போகிறீர்களா? என்று கூறி அவர்கள் அடிப்பதை தடுத்து நிறுத்தினான். பிறகு என் மகன் தாமாகவே தமது உடைகளை எடுத்து உடுத்திக்கொண்டார். அவர் நின்றுகொண்டிருந்த இடம் முற்றிலும் இரத்தமயமாக இருந்தது இரத்தம் வழிந்த பாதங்கள் அவர் நடந்து சென்ற பாதையை மிகவும் தெளிவாகக் காட்டின அந்த தரை முழுவதும் இரத்தமயமாக இருந்தது.

அவர் நடந்த இடமெல்லாம் இரத்தம் வழிந்தோடிக் கிடந்ததால் அவர் நடந்த பாதையை நான் தெளிவாகக் காண முடிந்தது. ஆனால் அவர்கள் அந்த உடையைக் கூட போடவிடாமல் அவரை தள்ளிக்கொண்டும் இழுத்துக்கொண்டு சென்றனர். என் மகன் ஒரு திருடனைப்போல இழுத்துச் செல்லப்பட்டார். அவரது கண்களில் வழிந்த இரத்தம் காய்ந்துபோயிருந்தது. அவருக்கு தண்டனை அளிக்கப்பட்ட பிறகு அவரை சிலுவையைச் சுமக்கச் செய்தார்கள். அவர் சிறிது தூரம் அதைத் தூக்கிச் சென்றார் பிறகு யாரோ ஒருவர் வந்து அவருக்குப் பதிலாக அந்தச் சிலுவையைச் சுமந்துசென்றார். என் மகன் சிலுவையில் அறையப்படும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது சிலர் அவரது கழுத்தில் அடித்தனர் சிலர் அவரது முகத்தில் குத்தினர். ஒருவன் எவ்வளவு கொடுமையாக குத்தினான் என்றால் நான் அதைப் பார்க்காவிட்டாலும் அந்தச் சந்தத்தைத் தெளிவாக கேட்க முடிந்தது. சிலுவையில் அறையப்படும் இடத்திற்கு வந்தபோது அவரைச் சிலுவையில் அறைவதற்குத் தேவையான அனைத்து சாதனங்களும் ஆயத்தமாக இருந்தன.
என் மகன் அந்த இடத்திற்கு வந்தவுடன் தாமாகவே தமது ஆடைகளைக் களைந்தார். படைவீரர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு இனி இது இவனது ஆடைகள் கிடையாது நமக்குரியவை ஏனென்றால் இவன் மரண தண்டனைக்கு உள்ளானவன் என்று கூறினர். எனது மகன் பிறந்தமேனியாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர் ஓடிவந்து தனது முக்காடினைக் கொடுத்தார் அதை அவர் மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொண்டு தமது அவமானத்தை அதனால் மூடிக்கொண்டார். அதன் பிறகு அவரது பகைவர்கள் அவரை சிலுவையின் மீது இழுத்துப்போட்டு ஏற்கனவே ஆணி அடிப்பதற்காக இருந்த துவாரத்தின் மீது அவரது வலது கரத்தைவைத்து ஆணிகளால் அறைந்தனர்.
அவரது கைகள் விறைப்பாக இருந்ததால் அவரது கரத்தில் கயிற்றைக் கட்டி மறுபுறமாக இழுத்து அங்கிருந்த துவாரத்தின் மீது வைத்து ஆணி அறைந்தார்கள். பிறகு அவரது அங்கங்களும் நரம்புகளும் வெடித்துவிடும் அளவிற்கு அவரது வலது பாதத்தை இடது பாதத்தின் மீது வைத்து இரண்டு ஆணிகளால் அறைந்தார்கள். அதன் பிறகு முள் முடியை[1] அவரது தலையில் வைத்து அடித்தார்கள். அதனால் வணக்கத்திற்குரிய அவரது தலை வெட்டுண்டு அதிலிருந்து வெளிவந்த இரத்தமானது அவரது கண்களையும் காதுகளையும் மறைத்து அவரது தாடி வழியாக ஒழுகியது.

இவ்வாறு அவர் சிலுவையில் காயப்பட்டு இரத்த வெள்ளத்தில் தொங்கிக் கொண்டிருந்தபோது கண்ணீரோடு நின்று கொண்டிருந்த என் மேல் மனமிரங்கி இரத்தம் சூழ்ந்த கண்களோடு சிலுவையின் அருகில் நின்றுகொண்டிருந்த எனது உறவினரான அருளப்பரைப் பார்த்து அவரிடம் என்னை ஒப்படைத்தார். அப்போது சிலர் எனது மகனை ஒரு திருடன் என்று கூறுவதையும் சிலர் இவன் பொய்யன் என்று கூறுவதையும் சிலர் இப்படிப்பட்ட சாவிற்கு இவனைத்தவிர வேறு எவனுக்கும் தகுதியில்லை என்று பழி கூறுவதையும் நான் கேட்டேன். இவற்றைக் கேட்டதும் எனது துக்கம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நான் கூறியதுபோல முதல் ஆணி அவரது கரங்களில் அடித்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது நான் இறந்ததுபோலானேன் எனது கண்கள் இருண்டுபோயின எனது கரங்கள் நடுங்கின என்னால் சரியாக நிற்கக்கூட முடியவில்லை. எனவே துக்கம் தாங்கமுடியாமல் போனதால் அவரை ஆணியால் அடித்து சிலுவையில் தொங்கவிடும் வரை என்ன நடந்தது என்பதை நான் கவனிக்க முடியாமல் போயிற்று. நான் எழுந்தபோது எனது மகன் மிகுந்த வேதனையோடு சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

துக்கம் நிறைந்த அவரது தாயாகிய என்னால் நிற்கக் கூட இயலவில்லை. அழுதுகொண்டு ஆறுதலின்றி அங்கு நின்றுகொண்டிருந்த என்னையும் அவரது நண்பர்களையும் அவர் பார்த்ததும் மிகவும் வருந்தி பரிதாபமான குரலில் தமது தந்தையை நோக்கி தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று கதறினார். தந்தையே உம்மைத் தவிர தன்மீது கருணை காட்டுவோர் எவரும் இல்லை என்று கதறுவதுபோல் இருந்தது. அவ்வேளையில் அவரது கண்கள் அவர் பாதி இறந்துவிட்ட நிலையைக் குறித்தன. அவரது கன்னங்கள் உள்வாங்கியிருந்தன அவரது முகத்தை துயரம் சூழ்ந்திருந்தது அவரது திறந்த வாயில் இரத்தக் கறைபடிந்த நாவு தொங்கிக்கொண்டிருந்தது. அவரது வயிறு உள்வாங்கி முதுகோடு ஒட்டிக்கொண்டது. அவரது உடல் இரத்தமில்லாமல் முற்றிலும் வறண்டுபோயிருந்தது அவரது உடல் எலும்பும் தோலுமாய்க் காட்சி அளித்தது. அவரது இரு கரங்களும் வலுவாக இழுக்கப்பட்டதால் அவரது உடலும் சிலுவையைப் போலவே காட்சி அளித்தது. அவரது தலை முடியும் தாடியும் இரத்தத்தால் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. அவரது இதயம் ஒன்று மட்டுமே புதிதாக இருந்தது. ஏனென்றால் அவரது திரு இருதயம் மிகவும் சிறந்தது வல்லமை வாய்ந்தது. அவரது தோல் எவ்வளவு மிருதுவானதென்றால் சிறியதொரு காயம் ஏற்பட்டாலும் அதிலிருந்து இரத்தம் வழிந்தோடும். அவரது இரத்தம் எவ்வளவு மென்மையாக இருந்ததென்றால் இரத்தத்தின் வழியாக அவரது சரீரத்தைக் காண முடிந்தது.
சில நேரங்களில் அவரது காயம்பட்ட உடல் பாகங்களில் வேதனையும் வலியும் அதிகமாகி அவரது உடல் மேலோங்கி எழுந்தது. அது அவரது இதயத்திற்கு பெரும் வேதனையைக் கொடுத்தது. அவரது இருதயத்திலிருந்து வலியும் வேதனையும் உடல் பாகங்கள் முழவதும் பரவி சாவின் கடைசி நிமிடத்திற்கு அவரை இட்டுச்சென்றது. அவரைச் சுற்றி அவரது நண்பர்கள் வேதனையுடன் அழுதுகொண்டிருந்தார்கள். இயேசுவின் உதவி அவர்களுக்கு இருந்திராவிடில் அந்த வேதனையையும் துக்கத்தையும் அவர்களால் தாங்கியிருக்க இயலாது. இயேசு இவ்வாறு வேதனைப்படுவதைப் பார்ப்பதைவிட முடிவில்லா காலத்திற்கும் நரகத்தில் தள்ளப்படுவது நலமே என்று நினைத்தார்கள். இப்படி அழுது புலம்பிக்கொண்டிருந்தவர்களை எனது மகன் மிகவும் கரிசனையாகக் கண்நோக்கினார்.

அவர் இவர்கள்மேல் வைத்திருந்த மென்மையான அன்பால் அவரது வேதனை இன்னும் அதிகமானது. எனவே சாதாரண மனிதன் வேதனை மிகுதியால் புலம்புவதைப்போலவே அவரும் தந்தையே எனது ஆவியை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் என்று கதறினார. இவர் இவ்வாறு கூறக்கேட்டதும் அவருடைய வியாகுலத் தாயான எனது உடல் முழுதும் அதிர்ந்தது துக்கம் எனது உள்ளத்தில் கசப்பாய் பாய்ந்தது. அவர் கதறியது இப்போது கதறுவதைப்போல என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவ்வாறு அவர சாகும் வேளையில் சொல்லெனாத் துயரமானது அவரது உடலெங்கும் பரவி தாங்கமுடியாத வேதனையால் அவரது உடல் மேலோங்கியது இதயம் வெடித்தது இறுதியாக அவரது தலை ஒரு முறை அன்னார்ந்து பார்த்தபின் கீழே விழுந்தது அவரது வாய் திறந்தது இரத்தம்படிந்த அவரது நாவு வெளியில் தொங்கியது. ஆணி அறையப்பட்டிருந்த இடத்திலிருந்து அவரது கைகள் இழுத்துக்கொண்டன எனவே அவரது பாதங்கள் உடலின் முழு பார்த்தையும் தாங்கியது. அவரது விரல்கள் விறைத்துப்போயின முதுகு சிலுவை பக்கமாக முட்டிக்கொண்டிருந்தது.

மரியா உன் மகன் இறந்துவிட்டார் என்றும் இறந்த இவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்றும் சிலர் என்னிடம் கூறினர். அங்கிருந்து அனைவரும் சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு மனிதன் அவரது விலாவை ஈட்டியால் குத்தினான். அவன் எவ்வளவு பலமாகக் குத்தினான் என்றால் அது ஒரு புறம் நுழைந்து மறுபுறம் வெளிவந்தது. அவன் அதை வெளியில் எடுத்தபோது அதில் இரத்தம் படிந்திருந்தது. இவ்வாறு எனது மகனின் விலாவைக் குத்தியதை எனது இருதயத்தைக் குத்தியதைப்போல் உணர்ந்தேன். பிறகு அவரை சிலுவையினின்று இறக்கி எனது மடியில் கிடத்தினார்கள்.
அவரது உடல் தொழுநோயாளியின் உடலைப்போல இருந்தது உடலெல்லாம் திறந்திருந்தது. அவரது கண்கள் உயிரற்று இரத்தத்தால் மூடப்பட்டிருந்தது. அவரது வாய் பனிக்கட்டியைப்போல குளிர்ந்திருந்தது. அவரது தாடி இரத்தம் படிந்த நூலைப்போல இருந்தது. அவரது முகம் விரைத்துப்போயிருந்தது. அவரது கைகளும் விறைத்துப்போயிருந்ததால் அவரது கைகளை மடக்க முடியவில்லை. எனவே விறைத்துப்போன அவரது உடல் சிலுவையில் தொங்கிய நிலையிலேயே எனது மடியில் வைக்கப்பட்டது.
அதன்பின் நான் வைத்திருந்த லினென் துணியால் அவரது உடலில் படிந்திருந்த இரத்தத்தைத் துடைத்தேன். அவர் இறந்தபோது திறந்துகொண்ட கண்களையும் வாயையும் மூடினேன். பிறகு அவரது உடலை சுத்தமான லினென் துணியில் வைத்துக் கட்டினார்கள். அதன்பிறகு அவரது உடலை ஒரு கல்லறையில் வைத்தனர். அவருக்குச் சித்தமானால் நானும் அவரோடு அந்தக் கல்லறையில் உயிரோடு அடக்கம் செய்யப்பட தயாராக இருந்தேன். இவை அனைத்தும் நடந்தேறிய பிறகு எனது அன்புக்குரிய அருளப்பன் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பார் மகளே உங்களுக்காக எனது மகன் பட்ட பாடுகளைப் பார்.

[1] புத்தகம் 7, அதிகாரம் 15ல் உள்ள விளக்கம்: "அவரை சிலுவையில் அறையுமுன்பு அவர் தலையிலிருந்த முள் முடியை எடுத்துவிட்டனர். அவரை சிலுவையில் அறைந்தபின் அவரது பரிசுத்த தலைமீது மீண்டும் வைத்து அழுத்தினர். எவ்வளவு வேகமாக அது அவரது தலையில் நுழைந்ததென்றால், இங்கும், அங்கும் பீறிட்டெழுந்த இரத்தமானது அவரது கண்களை மூடி மறைத்தது, அவரது கண்களிலும் காதுகளிலும் இரத்தம் வழிந்தோடியது.”

கிறிஸ்து தான் எவ்வாறு தனது முழு விருப்பத்தோடு தனது பகைவர்களிடம் சிலுவைச் சாவிற்கு தன்னையே முழுவதுமாகக் கையளித்தார் என்பதையும் அவருடைய இனிமையான பாடுகளின் நிமித்தமாவது நமது உடலை தவறாகப் பயன்படுத்துவதை நாம் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறுகிறார்.

புத்தகம் 1 - அத்தியாயம் 11
நானே விண்ணையும் மண்ணையும் படைத்தேன். எனது உண்மையான உடல் உன்னத பலியாக பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. என்னை உன் முழு இதயத்தோடு அன்பு செய் ஏனென்றால் நான் உன்னை அன்பு செய்து உனக்காகவே எனது பகைவர்களின் கைகளில் என்னை முழுமையாக சிலுவைச் சாவிற்கு கையளித்தேன். என் தாய்க்கும் நண்பர்களுக்கும் துயரத்தைக் கொடுத்தேன். எனக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த ஈட்டியையும் ஆணிகளையும் மற்ற அனைத்து ஆயுதங்களையும் பார்த்தவுடன் என் உள்ளம் துயரத்தின் உச்சத்தில் ஆழ்ந்தது. முள் முடி சூட்டப்பட்ட எனது தலையிலிருந்து உடல் முழுவதும் இரத்தம் வழிந்தோடியபோது எனது பகைவர்கள் என் இதயத்தை பிடிங்கியிருந்தால்கூட அவர்களுக்கு அதைக் கையளித்திருப்பேன். ஏனென்றால் உன்னை நான் இழப்பதைவிட என் இதயத்தை அவர்கள் காயப்படுத்தவும் கையளித்திருப்பேன். எனவே நீ என்னை உன் முழு உள்ளத்தோடு அன்பு செய்யாவிடில் அது உன் நன்றிகெட்ட நிலையைக் குறிக்கும்.

உனக்காக எனது தலை சிலுவையில் கட்டித் தொங்கவிடப்பட்டதுபோல நீயும் தாழ்ச்சிக்குத் தலை வணங்கவேண்டும். எனது கண்கள் இரத்தத்தாலும் கண்ணீராலும் மறைக்கப்பட்டதுபோல உனது கண்களும் உனக்கு மகிழ்ச்சி தருவதிலிருந்து விலகி இருக்கவேண்டும். எனது காதுகள் இரத்தம் நிறைந்து தீய பொல்லாத வார்த்தைகளைக் கேட்டது எனவே இவ்வாறான தீய பொல்லாத பேச்சுக்களுக்கு நீ இடமளிக்கக்கூடாது. நான் குடிப்பதற்காக எனது வாயில் இனிப்பிற்குப் பதிலாக கசப்பான காடி கொடுக்கப்பட்டதுபோல உனது வாய் தீயதை அகற்றி நல்லவற்றை மட்டுமே பேச வேண்டும். என் கைகளை ஆணி அறைய நான் விரித்துக்கொடுத்ததுபோல் நீயும் உனது கைகளை (பணிகளை) ஏழைகளுக்காகவும் எனது திருச்சட்டங்களை கடைபிடிப்பதற்காகவும் விரித்துக்கொடு. என்மீது நீ கொண்டுள்ள அன்பினால் உனது பாதங்கள் என்னை நோக்கி வரட்டும். எனது பாதங்கள் சிலுவையில் அறையப்பட்டதுபோல் உனது பாதங்களால் காம இச்சைகளை நசுக்கிவிடு. அப்படி நீ செய்தால் நான் சிலுவையில் துடித்ததைப்போல உனது அங்கங்கள் யாவும் எனக்கு கீழப்படிவதற்காக துடிக்கட்டும். நான் உனக்கு அதிகமான அருளை வழங்கியிருப்பதால் மற்றவர்களைவிட நீ அதிக சேவைகள் செய்யவேண்டும்.

காவல் தூதர் ஒருவர் பிரிஜித்தாவிற்காக வேண்டுகிறார். இயேசு அந்த சம்மனசிடம் எதற்காக வேண்டுகிறாய் என்று கேட்கிறார். மேலும் தனது மணமகளுக்கு எது நல்லது என்பதையும் எடுத்துறைக்கின்றார்.

புத்தகம் 1 - அத்தியாயம் 12
இயேசுவின் மணமகளான பிரிஜித்தாவின் காவல் தூதர் இயேசுவிடம் வந்து அவளுக்காக மன்றாடினார். அதற்கு இயேசு "ஒரு மனிதன் அடுத்தவருக்காக மன்றாட விரும்பினால் அவரது மீட்புக்காக மன்றாட வேண்டும். நீ எனது வற்றாத அன்பினால் சுடர்விட்டெரியும் அணையாத நெருப்பு. நீ என்னைப் பார்க்கும்போது அனைத்தையும் கண்டுகொள்கிறாய் அவற்றைப்பற்றி தெரிந்துகொள்கிறாய். நீ எனது விருப்பம் எதுவோ அதையே விரும்புகிறாய். எனவே எனது மணமகளுக்கு எது நல்லதோ அதைச் சொல்" என்றார்.
அதற்கு அந்த தூதர், "ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர்" என்று கூற, "அனைத்தும் என்றால், படைக்கப்பட்ட, இனி படைக்கப்படவிருக்கிற, எனது தெய்வீகத்தில் குடியுள்ள அனைத்தும் என்று பொருள். நான் மாறாதவர், விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தும் நான் அறிந்தவையே. ஆனால் நமது இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கும் எனது மணமகள் எனது திருவுளத்தை உணர்ந்துகொள்ளுமாறு அவளுக்கு எது நல்லதோ அவற்றை எனக்குக் கூறு" என்று இயேசு பதிலுரைத்தார். "ஆண்டவரே இவளுக்கு தற்பெருமையுள்ள பெரிய இதயம் இருக்கிறது. எனவே நீர் அதைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று அந்த தூதர் கூறினார். அதற்கு இயேசு "அப்படியென்றால் உனது வேண்டுகோள் என்ன?” என்று கேட்க, "ஆண்டவரே, அவள் இதயத்தைக் கட்டுப்படுத்த உமது இரக்கம் அவளுக்குத் தேவை" என்று கூற, "உனக்காக நான் இதைச் செய்வேன். நீதியற்ற இரக்கம் எப்போதும் என்னிடமில்லை. எனவே, அவள் என்னை முழுமையான இதயத்தோடு அன்பு செய்யவேண்டும்" என்று இயேசு பதிலுரைத்தார்.

மூன்று பேய்களைத் தனக்குள் கொண்டிருந்த தனது பகைவனைப் பற்றியும் அவனுக்கு கொடுக்கப்படும் தீர்ப்பைப்பற்றியும் கிறிஸ்து கூறுகிறார்.


புத்தகம் 1 - அத்தியாயம் 13

ஒருவன் தன்னோடு மூன்று பேய்களைக் கொண்டிருந்தான். ஒரு பேய் அவனுடைய பாலுறுப்புகளிலும் இரண்டாவது அவனுடைய இதயத்திலும் மூன்றாவது அவனுடைய வாயிலும் குடியிருந்தது. முதலாமவன் தனது குதிங்கால் வரையில் நீரை வார்த்துவிட்ட கப்பலோட்டியைப் போன்றவன். அப்படிச் செய்வதால் நீரானது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கப்பல் முழுவதும் நிரம்பும். பிறகு அங்கு வெள்ளப்பெருக்கெடுத்து அந்த கப்பல் கடலில் மூழ்கிவிடும். இங்கே கப்பலானது அவனது உடலையும், நீர் பெறுகுவதைப்போல காம இச்சையானது அவனுக்குள் குடியிருக்கும் பேயால் புயலைப்போல தூண்டிவிடப்படுவதையும் குறிக்கிறது. காம இச்சையானது அவனது குதிங்கால் வரை நுழைந்து பின் அவனது கெட்ட சிந்தனைகளால் மட்டற்ற மகிழ்ச்சி தரும் ஒன்றாக மாறுகிறது. அவற்றைக் எதிர்கொள்ள அவன் தவ முயற்சிகளை மேற்கொள்ளாததாலும், சுத்தபோசனம் செய்து அவற்றை கட்டுப்படுத்தத் தவறுவதாலும் நீர் பெறுகுவதைப்போல அவனது காம இச்சையானது நாளுக்கு நாள் அதிகரித்து அவனது உள்ளத்தைப் பாதிக்கிறது. நீர் பெருக்கெடுத்து அந்தக் கப்பல் மூழ்குவதைப்போல காமத்தில் மூழ்கி மீட்பு என்னும் துறைமுகத்தை அவன் அடைய முடிவதில்லை.

இதயத்தில் வசிக்கும் இரண்டாமவன் ஆப்பில் பழத்திலுள்ள புழுவைப்போன்றவன். அந்தப் புழு முதலில் ஆப்பில் பழத்தின் அடிவாரத்தை சாப்பிட்டுவிட்டு அங்கு தனது சாணத்தை விட்டுச்செல்லும். பிறகு அந்தப்பழம் முழுவதுமாகப் பாழாகும் வரை அதன் அனைத்துப் பகுதிகளையும் ஊடுறுவும். இதைப்போலவே அந்தப் பேயும் முதலில் மனிதனின் நல்ல விருப்பங்களையும், மனதிற்கு திடமளிக்கும் நல்ல ஆசைகளையும் பாழாக்குகிறது. இதனால் அவனது இதயத்தில் நன்மைக்கே இடமில்லாமல் போகிறது. பிறகு அம் மனிதனின் இதயத்தில் அவன் அதிகமாக அன்பு செய்பவற்றையும் உலக ஆசைகளையும் திணிக்கிறது. இதனால் இத்தகைய சிற்றின்பத்திற்காக அவனது உடலை ஈடுபடுத்தச் செய்கிறது. எனவே அவனை உற்சாகமிழந்தவனாய், எதையும் எளிதில் புரிந்துகொண்டு செயல்பட இயலாதவனாய் மாற்றி அவனது வாழ்க்கையை சோர்வடையச் செய்கிறது. இப்போது இம்மனிதன் அடிவாரத்தை இழந்த ஆப்பில் பழத்திற்கு ஒப்பானவன். இதயமில்லாதவன். அவனது இதயத்தில் நன்மைத்தனம் இல்லாததால் இதயமற்றவனைப்போலவே எனது கோவிலுக்குள் நுழைகிறான்.
மூன்றாமவன் எச்சரிகை இல்லாமல் அலைந்து திரிபவற்றை அம்பெய்து பிடிக்க ஜன்னல் வழியாக காத்திருக்கும் வேட்டைக்காரனைப் போன்றவன். தன்னுடைய ஒவ்வொரு பேச்சிலும் சாத்தானுக்குச் சாதகமானவற்றை பேசும் ஒருவனிடம் எப்படி சாத்தான் இல்லாமல் போவான்? நமக்குப் பிடித்தவற்றை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதில்லையா? தீய வார்த்தைகளைப் பேசி அடுத்தவரின் மனதைக் காயப்படுத்தும்போதெல்லாம் அங்கு சாத்தான் இருக்கிறான். இப்படிப்பட்ட மனிதர்களை, அணையா நெருப்பிலும் கொதிக்கும் கந்தகத்திலும் தள்ளப்பட்டும் விபச்சாரியைப்போலவும், தனது அங்கங்கள் துண்டிக்கப்பட்டு வேதனைக்குட்படுத்தப்படும் நயவஞ்சகமுள்ள துரோகியைப்போலவும், தனது அரசரைப் பரிகாசம் செய்ததற்காக நிலையான அவமானத்திற்குள்ளாகும் குடிமகனைப்போலவும் தண்டிப்பேன் என்று உண்மையும் சத்தியமுமான நான் உறுதியாகக் கூறுகிறேன்.
ஆயினும் அவனுடைய ஆன்மாவும் உடலும் ஒன்றித்து என்னை நோக்கி மன்றாடினால் எனது இரக்கத்தை அவனுக்கு திறந்து கொடுப்பேன். அவன் தீய வார்த்தைகள் பேசுவதை ஒழித்து, தன்னைப் பழிப்பவர்களைப் பற்றி கவலைப்படாமலும் தன்னை மற்றவர்கள் புகழ வேண்டும் என்ற ஆசையில்லாமலும் திருப்பலியில் கலந்துகொண்டால் நான் அவனைத் தேடி வருவேன்.

விரிவுரை

திருச்சபையால் விலக்கிவைக்கப்பட்ட ஒருவரது இறுதிச் சடங்கிற்கான செபத்தை குருவானவர் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் பிரிஜித்தம்மாள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, “இந்த குரு தனது அதிகாரத்தைக்கொண்டு இந்த மனிதரை அடக்கம் செய்தார். இந்த அடக்கத்திற்குப்பின் இக் குருவானவர் அடக்கம் செய்யப்படுவார் என்பது நிச்சயம். ஏனென்றால் பாரபட்சம் பார்க்கக்கூடாது, தவறிழைத்த பணக்காரர்களுக்கு பெருமை சாற்றக் கூடாது என்று கற்பித்த பிதாவிற்கு எதிராக பாவம் செய்துள்ளார் என்று கூறக்கேட்டார்.

"அழிந்துபோகக்கூடிய சிறிய இலாபத்திற்காக இந்த குருவானவர் தகுதியற்ற ஒரு மனிதரை பெருமைப்படுத்தி, தகுதியுள்ளவர்களுக்கு மத்தியில் அடக்கம் செய்துள்ளார். இப்படி இவர் செய்திருக்கக்கூடாது. தீயவனை நல்லவருக்கு பக்கத்தில் புதைத்து உண்மையும், நன்மையுமான எனது ஆன்மாவிற்கு எதிராக பாவம் செய்துள்ளார். "என்னை மறுதலித்தவர்களை இறுதி நாளில் நானும் மறுதலிப்பேன்" என்று சொன்னதும் நான் தானே. இவர் எனது திருச்சபையும், திருச்சபைத் தலைவரும் விலக்கிவைத்த ஒருவரை பெருமைப்படுத்தியுள்ளார்" என்று இயேசு கூறினார். தன்னைப்பற்றி இயேசு இவ்வாறு கூறியதைக் கேள்வியுற்ற குருவானவர் மிகவும் மனம் வருந்தி, நான்காம் நாள் மறித்தார்.

சுவீடனைச் சேர்ந்த புனித பிரிஜித்தாவின் தீர்க்கதரிசனங்களும், திருவெளிப்பாடுகளும்.


புனித பிரிஜித்தாவிற்கு திருத்தந்தை ஒன்பதாம் போனிபாஸ் 1391ஆம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கினார். இவர் புனிதராக உயரத்தப்பட்டதை திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் 1415ஆம் ஆண்டு நடந்த மாபெரும் கான்ஸ்டன்ஸ் பேரவையில் உறுதிசெய்தார்.

அக்காலத்திலிருந்தே இப்புனிதருடைய திருவெளிப்பாடுகள் அனைத்தும் உண்மையானவை என்றும், உயரிய நம்பகத்தன்மை கொண்டவை என்றும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கருதப்படுகிறது. திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியார் (1370-78) இவற்றை அலசி ஆராய்ந்தபின் அங்கீகாரமளித்து தனது தீர்ப்பை பிரகடனப்படுத்தினார். இதைப்போலவே திருத்தந்தை ஒன்பதாம் போனிபாஸ் Ab origine mundi, par. 39 (7 Oct 1391) என்ற திருத்தந்தையின் மடலில் எழுதினார். மீண்டும் இவை கான்ஸ்டன்ஸ் பேரவையாலும் (1414-18) பாசில் பேரவையாலும் (1431-49) பரிசீலிக்கப்பட்டு கத்தோலிக்க விசுவாசத்திற்கு உகந்தவை என்று உறுதிசெய்யப்பட்டது. இத்திருவெளிப்பாடுகள் கத்தோலிக்க விசுவாசத்தற்கு எதிரானவையல்ல என்று பல இறையியல் வல்லுநர்கள் கூறியிருக்கின்றனர். அவர்களில் பாரிஸ் பல்கலைக்கழக துணை வேந்தரும் இறைவல்லுநருமான ஜீன் ஜெரசன் (1363-1429) மற்றும் கர்தினால் யுவான் டி டாரகிமேடா (1388-1468) என்பவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

நாங்கள் மூன்று சகோதரர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வதற்காக கற்புடனும் தாழ்ச்சியுடனும் வாழ்ந்து, இறைமகன் இயேசுவின் நற்செய்தியை உலகமெல்லாம் பரப்புவதற்காகவே எங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளோம். எங்களது பணி விவிலியத்தைப் போதிப்பதற்காகவும், புனித பிரிஜித்தாவின் திருவெளிப்பாடுகளை பரப்புவதற்காகவும் தயாராக உள்ள சகோதர சகோதரிகளை திரட்டி, இப் பணியைச் செம்மையாகச் செய்வதே. உங்களுக்கு இணையத் தளம் (வெப்சைட்) இருந்தால், அதன் ஹோம் பேஜில் எங்களைத் தொடர்பு கொள்வதற்கான வசதி செய்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும், ஆத்துமங்களை இரட்ச்சிக்கும் இந்த திருவெளிப்பாடுகளைப் பற்றி சொல்லுங்கள். நீங்கள் ஒரு பிரசங்கியாக இருந்தால், தூய ஆவியின் அருளோடு இத் திருவெளிப்பாடுகளை உங்களது சபையில் போதியுங்கள். இந்தப் புத்தகத்தின் பிரதிகளை அச்சிட்டு அனைவருக்கும் இலவசமாகக் கொடுங்கள்.

தங்களது தாய் மொழியிலும், பிற மொழிகளிலும் நன்றாக மொழி பெயர்க்கும் திறமையுள்ள சகோதர சகோதரிகள் எங்களுக்குத் தேவை. மேலும், எம்.பி.3 ஆடியோ புத்தகங்களை தயாரிக்கும் திறமையுள்ளவர்களும் எங்களுக்குத் தேவை. இதைப் படிக்கும் உங்களது உதவியுடன் ஒரு நாள் நிச்சயமாக 50 மொழிகளில் இந்த இணையத் தளத்தை உருவாக்க எங்களுக்கு ஆவல். பிற மொழிகளில் ஏற்கனவே புனித பிரிஜித்தாவின் திருவெளிப்பாடுகள் இருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை அவரது கொடைகளால் ஆசீர்வதிப்பார். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
நீங்கள் உண்மையிலேயே காப்பாற்றப்பட வேண்டுமென்று விரும்பினால் கடவுள் அருளிய இந்தத் திருவெளிப்பாடுளை உங்கள் உயிருள்ளவரை தினந்தோறும் படியுங்கள். ஏனென்றால் சாத்தான் நீங்கள் படிப்பதை நிறுத்துவதற்கு பல வழிகளில் முயற்சி செய்வான். அவ்வாறு நீங்கள் படிப்பதை நிறுத்தும்போது இவை அனைத்தையும் மறந்து நீங்கள் மீண்டும் பாவத்தில் விழ ஏதுவாகிவிடும். இத் திருவெளிப்பாடுகளை நீங்கள் எப்போதும் படிப்பதற்கு ஏதுவாக இவற்றை அச்சிட்டு (பிரிண்ட்) வைத்துக் கொள்ளுங்கள். விவிலியத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல இருளின் நேரம் வரும்போதும் கூட நீங்கள் இவற்றை படிக்க முடியும்.
இந்தப் புத்தகம் நம் பாவக்கறைகளை நேருக்குநேர் பார்க்க வழிவகுக்கும் ஒரு கண்ணாடி. ஒவ்வொருவரின் ஆன்மாவைச் சோதனையிட்டுக் கொள்வதற்கும் கடவுளுக்கு பிடித்தமானவற்றையும் பிடிக்காதவற்றையும் அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இந்தப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிப்பதால் நாம் கடவுளை எவ்வாறு அன்பு செய்யவேண்டும் என்றும் அதைப்போலவே நமது அயலாரையும் எப்படி அன்பு செய்யவேண்டும் என்றும் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இவ்வுலக இன்பங்களைவிட இறைவனுக்காக நாம் பாடுபடும்போது மேலுலகில் நமக்குக் கிடைக்கும் பேரின்பம் எவ்வளவு மேலானது என்பதையும் உணரந்து கொள்ள முடியும். துன்ப நேரத்தில் கடவுளுக்கு நன்றி செலுத்தவும் வளமாக வாழும்போது தற்பெருமை கொள்ளாதிருக்கவும் நாம் உயரவடையும்போது இறுமாப்படையாமலும் துன்பவேளையில் துவண்டுவிடாமலும் நாம் வாழ நமக்கு அறிவுறுத்துகிறது.

புனித பிரிஜித்தா மிகவும் உயர்ந்த, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் குடும்பம் முழுவதும் இயேசுவில் விசுவாசம் கொண்டு, ஏராளமான இவர்களது சொத்துக்களை பல கோவில்களுக்கும், மடங்களுக்கும், ஏழைகளுக்கும் வாரி வழங்கியவர்கள். தனது 10வது வயதில், சிலுவையில் தொங்கும் இயேசுவின் தரிசணம் கிடைத்தது. அப்போது அவர், “பார், நான் எவ்வளது துன்பம் அனுபவிக்கிறேன் என்று பார்” என்றுரைத்தார். தற்போதுதான் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, “ஓ ஆண்டவரே, இதை உமக்கு யார் செய்தது? என்று கேட்க, “என்னை நிந்திப்பவர்களும், எனது அன்பை மறந்தவர்களுமே இவ்வாறு எனக்குச் செய்தனர்” என்று இயேச பதிலுரைத்தார். தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, பிரிஜித்தா கன்னியர் மடத்தில் சேர்ந்து, தனது சொத்துக்கள் அனைத்தையுமே ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டார். இவரது தீர்க்கதரிசனங்களில் பல நிறைவேறிவிட்டன, இன்னும் சில நிறைவேற வேண்டியுள்ளன. இவரது தீர்க்கதரிசனங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கிலாந்து மற்றும் பிரன்சு சாம்ராஜ்ஜியங்களைப் பற்றியது. இந்த இரண்டு நாடுகளும் 20 ஆண்டுகளுக்கு சண்டையிடும் என்றும், அதன் இறுதியில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் திருமணம் முடியும் என்று நம் ஆண்டவர் இயேசு பிரிஜித்தாவிற்கு முன்னுரைத்தது முழுமையாக நிறைவேறியது.

புனித பிரிஜித்தாவின் திருவெளிப்பாடுகளையும், தீர்க்கதரிசனங்களையும் உலகெங்குமுள்ள சகோதர சகோதரிகளுக்கு அறிவிப்பதற்கு, உங்கள் நன்கொடை மூலமாக எங்களுக்கு உதவுங்கள். அத்தோடு உங்களது செபங்களும் எங்களுக்குத் தேவை.

இச் சேவையை மிகவும் செம்மையாகச் செய்வதற்கு உங்களது நன்கொடைகள் தேவைப்படுகிறது. இச் செய்தியைப் பற்றி, பல கிறிஸ்தவ பத்தரிக்கைகளில் விளம்பரங்கள் செய்வதற்காகவும், பல மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதற்காகவும், இன்னும் ஏனைய சேவைகளுக்காகவும் நீங்கள் அளிக்கும் நன்கொடை செலவிடப்படுகிறது.


“இச்சிறியோரில் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” – என்று மத்தேயு 10:42ல் எழுதப்பட்டுள்ளது.

உங்களது உதவி எங்களுக்குத் தேவை; தயவுசெய்து நன்கொடை அளியுங்கள்.

கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
http://www.prophecyfilm.com/contact/ என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். (முடிந்தால் உங்கள் கடிதங்களை ஆங்கில மொழியில் எழுதுங்கள் நன்றி.)

We are looking for translators. Please contact us at: http://www.prophecyfilm.com/contact/


www.ProphecyFilm.com

Free DVDs and Books

The words of Christ to his bride about the method and the veneration she should maintain in prayer, and about the three kinds of people who serve God in this world.
  1   2   3   4   5   6   7   8   9   ...   264


The database is protected by copyright ©hestories.info 2017
send message

    Main page